பொதுவாகவே எல்லா காலத்திலும் நம்புபவர்களை ஏமாற்றுபவர்கள் ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதனால் தான் பலரும் நம்பி தங்களுடைய சொத்து சுகம் வாழ்க்கை என அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அந்த வகையில் நம்பி கொடுத்த பணம் திரும்ப வராமல் தவிப்பவர்கள் எளிமையான இந்த வழிபாட்டை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு
இன்றைய மோசமான சூழ்நிலையில் பணத்தை சம்பாதிப்பது பெரும் கஷ்டம் என்றால் சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் பாதுகாப்பது அதைவிட கடினம் யாரோ ஒருவரின் துன்பத்திற்கு உதவி புரிகிறோம் என்ற பேரில் நாம் துன்பத்திற்கு ஆளாக கூடிய நிலை தான் இன்று அதிகம் அப்படியான பிரச்சனைகளில் ஒன்றுதான் கொடுத்த பணம் திரும்ப வராமல் இருப்பது.
இது பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வருங்காலத்தையே இழப்பது போல ஆகிவிடும் இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி விடுவோம். ஆகையால் எந்த சூழ்நிலையிலும் நாம் தெளிவாக இருப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு. சரி நாங்கள் நம்பி பணத்தை கொடுத்து விட்டோம் அது திரும்ப வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பவர்கள் இதை செய்து பாருங்கள்.
இதற்கு ஹனுமன் படத்தை வீட்டில் பூஜை அறையில் வாங்கி வைத்து விடுங்கள் அதிலும் ராமர் உடன் இருக்கும் அனுமன் படம் வைத்தால் மிகவும் நல்லது. இந்த படத்திற்கு ஏலக்காய் மாலை போட வேண்டும். இந்த மாலை போட ஏலக்காய் எண்ணிக்கை அவசியம் கிடையாது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் படத்தில் அளவிற்கு ஏற்றார் போல் போடுங்கள்.
ஒருவேளை எங்களால் இந்த படம் வாங்கி வைக்க முடியாது என்பவர்கள் பெருமாள் படம் அல்லது கிருஷ்ணர், மகாலட்சுமி தாயார் போன்றோர் படத்தை பயன்படுத்தலாம். அனுமன் படம் இருப்பது சிறப்பு. அதே போல் தினமும் கொஞ்சம் துளசியை கையில் வைத்துக் கொண்டு அனுமன் படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் அனுமான் சாலிசா படிப்பது மிகவும் நல்லது.
ஹனுமன் சாலிசா படிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஸ்ரீ ராம ஜெயம் அல்லது ஆஞ்சநேயா என்ற இந்த ஒரு வார்த்தையை கூட நீங்கள் மனதார சொன்னாலே போதும். இது போல தினமும் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி வழிபாடு செய்யும் வேலையில் நீங்கள் கொடுத்த பணம் வரவேண்டும் என்று அனுமனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சனி தோஷம் நீங்க மந்திரம்
ஆனால் இந்த வழிபாடு நீங்கள் நியாயமான முறையில் சம்பாதித்து இழந்த பணத்திற்கு மட்டுமே பலனை தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கொடுத்த பணம் வராமல் தவிப்பவர்கள் அனுமனை தஞ்சம் அடைந்து இந்த முறையில் வழிபாடு செய்த நிச்சயம் திரும்ப பெறலாம் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் சேர்ந்து பலனடையுங்கள்.