- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரவேண்டிய பணம் விரைவில் வர

வரவேண்டிய பணம் விரைவில் வர

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான செயலுக்கு பின்பாக இருக்கக்கூடிய ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பணம்தான். எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலால் நமக்கு ஏற்படக்கூடிய ஆதாயம் என்றால் அது பணவரவாகத்தான் இருக்கும். அப்படி நாம் செய்த செயலுக்குரிய பணவரவு நம்மை வந்து சேரவில்லை என்றால் அதனால் பல விதமான மனவருத்தங்கள் உண்டாகும். பணவரவு வரவில்லை என்றாலேயே குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது இருக்காது. இந்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணமாக திகழக்கூடிய அந்த பணவரவை விரைவில் நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு உதவக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வரவேண்டிய பணம் விரைவில் வர

ஒருவரிடம் நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்பி வரவேண்டும் என்றாலோ நாம் செய்த வேலைக்குரிய பலனை நாம் பெற வேண்டும் என்றாலோ அல்லது பூர்வீக சொத்துக்கள் வழியாக வரவேண்டிய பணம் வராமல் இருந்தாலோ அல்லது சொத்துக்களின் மூலம் பணவரவு வரவேண்டும் என்றாலோ இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்யலாம். இவை அனைத்தையும் நமக்கு சரி செய்து நமக்கு வரவேண்டிய பணத்தை நம்மிடம் விரைவில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு உதவக் கூடிய தெய்வமாகத்தான் காலபைரவர் திகழ்கிறார். கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய எதிரிகள் தொல்லை மட்டும் நம்மை விட்டு நீங்காமல் நமக்கு இருக்கிற கஷ்டங்கள் மட்டும் நம்மை விட்டு நீங்காமல் பண வரவும் நம்மிடம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் எந்த ஆலயத்தில் காலபைரவர் சன்னதி இருக்கிறதோ அந்த ஆலயத்திற்கு செல்லுங்கள். முதல் நாளே எந்த நேரத்தில் கால பைரவருக்கு பூஜை செய்வார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் செல்ல வேண்டும். கால பைரவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அபிஷேகத்திற்காக மஞ்சள், விபூதி, சந்தனம் போன்றவற்றையும் வாசனை பொருட்களான பன்னீர், புனுகு, ஜவ்வாது போன்றவற்றையும் வாங்கி கொடுக்க வேண்டும்.

அதேபோல் கால பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் வாங்கி தர வேண்டும், அதேபோல் காலபைரவருக்கு செவ்வரளி மலர்களை மாலையாக வாங்கி கொடுக்க வேண்டும். அவருடைய கழுத்தில் மாலையாக போட வேண்டும் என்பதால் அதற்கேற்றார் போல் வாங்கிக் கொள்ளுங்கள். பொதுவாக நாம் ஆலயத்திற்கு செல்லும் பொழுது தேங்காய் பழம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம் அல்லவா? அப்படி தேங்காய் வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தோடு ஐந்து முந்திரி, 5 திராட்சையும் சேர்த்து வைத்து காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். முந்திரியையும் திராட்சையும் காலபைரவரிடமே வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்து உடைத்த தேங்காயை திருப்பித் தரும்பொழுது அந்த தேங்காயில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி காலபைரவருக்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு கால பைரவரை 9 முறை வலம் வந்து நியாயமாக எனக்கு வர வேண்டிய பணம் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் காலபைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் விரைவில் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: சிவனை வழிபாடு செய்யும் முறை

கால பைரவரை சரணாகதி அடைந்து யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு காலபைரவரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு கால பைரவரின் அருளால் நியாயமான அனைத்தும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்