ஒருவருடைய வாழ்க்கையில் வறுமை என்பது ஏற்பட்டு விட்டால் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதாலும் அந்த செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பதாலும் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அப்படி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றால் நம் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம் என்றே பொருள் படும். அப்படி பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதற்கும் கடன் பிரச்சினை முற்றிலும் தீர்வதற்கு முருகப்பெருமானை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடீஸ்வர யோகம் பெற தீபம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் பலவிதமான நன்மைகள் உண்டாகும். நாம் வேண்டியவரத்தை முருகப்பெருமான் அருள்வார் என்றும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறையை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் பலரும் பலவிதங்களில் கூறியிருப்பார்கள். அந்த வகையில் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் இந்த ஒரு தீப வழிபாட்டை தொடங்கி தொடர்ச்சியாக 48 நாட்கள் தீபம் ஏற்றினோம் என்றால் கண்டிப்பாக முறையில் முருகப் பெருமானின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய வறுமை நீக்கும் வறுமையால் ஏற்பட்ட கடனும் தீரும்.
இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அன்றுதான் ஏற்ற தொடங்க வேண்டும். நல்ல நாளாக பார்த்து ஒரு செவ்வாய்க்கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் கரிநாள் அன்றைய நாளில் இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய நாளில் காலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் வழிபாட்டிற்கு அனைத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். இதோடு சேர்த்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி அதில் சிவப்பு நிற திரியை போட்டு மூன்று டைமண்ட் கற்கண்டு, சிறிது பச்சை கற்பூரமும் சேர்த்து தீபம் ஏற்றி முருகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும். ஒரு நாள் ஏற்றிய தீபத்தில் இருக்கக்கூடிய நெய்யை பயன்படுத்தி அடுத்த நாள் ஏற்றக்கூடாது. அதை சுத்தம் செய்து புதிதாக நெய் புதிதாக கற்கண்டு புதிதாக பச்சை கற்பூரம் புதிதாக திரி போட்டு தான் ஏற்ற வேண்டும். அதேபோல் தொடர்ச்சியாக 3 அல்லது 5 செவ்வாய்க்கிழமை என்று ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது அந்த கோரிக்கையும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்
முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு தீபத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் ஏற்றுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கும் வறுமை நீங்கு நீங்குவதோடு கடன் பிரச்சனையும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.