வாஸ்து ரீதியாக பணம் சேர்க்க வீட்டில் வடக்கு திசையில் பீரோவை வைப்பார்கள். வடக்கு, குபேர திசை என்பதால் வடக்கு பார்த்து வைக்கப்படும் பொழுது பணம் ஆனது பீரோவில் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. அது போல வறுமை நீங்க, அன்னபூரணிக்கு இப்படி வழிபாடு செய்தால் தாந்த்ரீக முறையில் பணம் சேர்வதாக ஒரு நம்பிக்கையும் உண்டு. அதைப் பற்றிய சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
சமையலறையை ஆட்சி செய்யக் கூடிய அன்னபூரணி ஆசிர்வாதம் இருந்தால் தான் வறுமை இருக்காது. காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக பாலை தான் நாம் தொட வேண்டும். பாலைத் தொட்டு ஒரு டம்ளர் பாலை பூஜை அறையில் வைத்து விட்டு, பிறகு மற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்பார்கள். இதனால் தன, தானியத்திற்கு பஞ்சம் வராது. குளித்து முடித்து சுத்தபத்தமாக சமையலறைக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் யாரும் செய்வது கிடையாது.
அடுப்பை தொட்டு வணங்கிய பின்பு அன்னபூரணிக்கு விளக்கேற்றி வைத்து பின்னர் சமையலை துவங்குவார்கள். அன்னபூரணி படத்தை அல்லது சிலையை சமையல் அறையில் வைத்து, எப்போதும் வழிபட வேண்டும். பூஜை அறையிலும் அன்னபூரணியை வைக்கலாம். அன்னபூரணியின் சிலையில் இருக்கக் கூடிய கரண்டியில் எப்பொழுதும் அரிசி இருக்க வேண்டும். அன்னபூரணியின் முன்பாக ஒரு செம்பு கலசம் ஒன்றை வையுங்கள்.
கலசத்திற்குள் விரலி மஞ்சள் ஒன்றை போட்டு, சிறிதளவு பச்சரிசியும், சிறிதளவு துவரம் பருப்பும் போட வேண்டும். பின்னர் அதில் ஒவ்வொரு நாளும் சமையல் செய்து முடித்த பின்பு கொஞ்சம் பணத்தை சேகரித்து வர வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பணத்தை போடுங்கள். 48 நாட்கள் இப்படி பணத்தை போட்டு அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் அந்த பணத்தை எடுத்து தானியங்களையோ, கல் உப்பு, மஞ்சள், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை வாங்கி ஜாடிகளில் நிரப்ப, வறுமை நீங்கி ஐஸ்வர்யம் சேரும் என்பது ஐதீகம்.
பூரட்டாதி நட்சத்திரம் குபேரனுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். குபேரன் பிறந்த நட்சத்திரம் என்பதால் இந்த நாளில் நீங்கள் அன்னபூரணியை நினைத்து இப்பொருளை வாங்கி வைத்தால் வீட்டில் வறுமை என்பது ஏற்படாது. அந்த காசிலிருந்து ஒரு பங்கை எடுத்து புண்ணிய காரியங்களுக்கும், கோவில்களுக்கும் செலவழிக்க வேண்டும். இப்படி செய்து வரும் பொழுது, எப்பேர்பட்ட துன்பங்கள் இருந்தாலும், கஷ்ட நிலையிலிருந்து மீண்டு மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற துவங்குவீர்கள்.
இதையும் படிக்கலாமே:
தைரியம் அதிகரிக்க விநாயகர் வழிபாடு
கலசத்தில் இருக்கும் மஞ்சள், பச்சரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை மரம், செடி அடியில் போட்டு விடுங்கள். மீண்டும் அதே போல கலசத்தை புதிதாக தயார் செய்து வைத்து, காசு போட துவங்குங்கள். சமைத்து முடித்ததும் காசை போட வேண்டும். சமைக்கும் பொழுது கல் உப்பை தான் பயன்படுத்த வேண்டும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் ஆகும். அதை கரண்டியில் எடுத்தால் பலன் இருக்காது. கைகளால் எடுத்து சமையலில் போட்டு வரும் பொழுது உங்களுடைய கை நல்ல ராசியான கையாக மாறும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள்.