வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தாலே போதும். எப்பேர்பட்ட பணக் கஷ்டமும் நீங்கும்.

Varahi-amman

இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான். பார்ப்பதற்கு உக்கிரமாக இருக்கும் இந்த அம்பாளின் மனது குழந்தை போன்றது. பாசத்தோடு நீங்கள் வேண்டி விரும்பி எதை கேட்டாலும் அந்த வரத்தினை அள்ளிக் கொடுத்து விடுவாள். ஆனால், உங்களுடைய மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இருக்கக்கூடாது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் கள்ளம் கபடம் இல்லாமல், நன்மைக்காக எதை விரும்பி கேட்கிறீர்களோ, அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. தவறு செய்பவர்களுக்கு முதலில் தண்டனை கொடுப்பவளும் இவள்தான்.

Varahi amman

இந்த வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது? எந்த மந்திரத்தை சொல்லி அவளது மனதை குளிர வைப்பது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாராஹி அம்மனை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். உங்களுக்கு வீட்டில் அந்த அம்மனின் திருவுருவ படத்தை வைத்து வழிபாடு செய்ய, மனதில் சிறிய உறுத்தல் இருந்தால் கூட, மன சங்கடத்துடன் வீட்டில் அம்பாளை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. நீங்கள் ஏற்றி வைக்கும் தீபத்தை வாராகி அம்மனாக நினைத்து இந்த பூஜையை மனத் திருப்தியோடு செய்யலாம்.

வாராஹி அம்மன் படம் இருந்தால் அவளுக்கு அரளிப் பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு பூக்களைச் சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

el deepam

ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். கருநீல நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சமாக வெண் கடுகை போட்டு சிறிய முடிச்சு போல கட்டி, மண் அகல் தீபத்தில் வைத்து, அந்த முடிச்சின் மேல் நல்லெண்ணெய்யை ஊற்றி, இந்த முடிச்சை தீபமாக ஏற்ற வேண்டும். வீட்டிலேயே இந்த தீபத்தை தாராளமாக ஏற்றலாம்.

- Advertisement -

இந்த பூஜையை செய்யும் போது வாராஹி அம்மனுக்கு பிடித்த மரவள்ளிக் கிழங்கை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு கிடைக்காதவர்கள், வெண் பூசணியை வாங்கி, அதை வேக வைத்து சாதத்துடன் கலந்தும் வைக்கலாம். தவறு கிடையாது. இப்படியாக ஒவ்வொரு வாரம் வரும் சனிக்கிழமை காலை 6 மணி யிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையைச் செய்யவேண்டும். முடியாதவர்கள் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். தொடர்ந்து 8 வாரம் சனிக்கிழமைகளில் இப்படி உங்களுடைய வீட்டிலும் இந்த வழிபாட்டை செய்யலாம். அல்லது கோவிலுக்குச் என்றும் இதேபோல் வழிபாட்டை செய்யலாம்.

venkadugu

இழந்த செல்வம், பொன், பொருள், இவைகளை மீட்டுத் தரும் சக்தி இந்த பூஜைக்கு உண்டு. வாழ்க்கையில் உங்களுக்கு எதிரி தொல்லை இருந்தால் அதில் இருந்தும் விடுபடலாம். தீராத மன கஷ்டம், தீராத துன்பங்கள், தீராத வேதனைகள், இவைகளிலிருந்து கூடிய விரைவில் வெளி வரும் வழியை அந்த வாராகி அம்மன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள்.

varahi

தீராத கடன் பிரச்சனைக்கு கூடிய விரைவில் விமோசனம் கிடைத்து விடும். எந்த ஒரு தெய்வத்தை வழிபட்டாலும், அந்த தெய்வத்தின் மூலமந்திரத்தை உச்சரித்து வழிபடுவது மிகவும் நல்லது. உங்களுக்காக வாராகி அம்மன் மூல மந்திரம் இதோ!

amman

வரஹி அம்மன் மூல மந்திரம்:
“ஓம் க்லீம் வராஹ முகி
ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி
தனம் வர்ஷய ஸ்வாகா”

இந்த மந்திரத்தை முடிந்தால் 108 முறை உச்சரிக்கலாம். முடியாதவர்கள் வெறும் மூன்று முறை உச்சரித்து மனதார வேண்டிக் கொண்டாலும் வேண்டிய வரங்களை உடனே தருவாள் வாராஹி அம்மன்.  தூய்மையான மனதையும், உண்மையான பக்தியையும் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த பூஜையைச் செய்தால் அவர்களுக்கு கை மேல் பலன் கிடைப்பது உறுதி. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.