- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவறுமையை போக்கும் குசேலர் தினம்

வறுமையை போக்கும் குசேலர் தினம்

- Advertisement -

மகாபாரதத்தில் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழியாக திகழ்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட கிருஷ்ணனை வழிபாடு செய்து நம்முடைய வறுமை நிலையை மாற்றி செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய முதல் புதன்கிழமை என்பது நமக்கு உதவி செய்யும். இந்த நாளில் கிருஷ்ணரையோ, குருவாயூரப்பரையோ நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வறுமை நிலை நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வறுமையை போக்கும் குசேலர் தினம்

கிருஷ்ணரும் குசேலரும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்றும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் கிருஷ்ணர் அரசராக இருந்த சமயத்தில் குசேலர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்தார். அப்பொழுது தன்னுடைய நண்பரை சந்தித்து ஏதாவது உதவியை பெறலாம் என்று எண்ணினாராம். அப்படி நண்பரை சந்திக்க செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதற்காக தன் வீட்டில் இருந்த அவலை ஒரு கிழிந்த துணியில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாராம்.

- Advertisement -

தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த குசேலரை பார்த்த கிருஷ்ணர் மிகவும் மன மகிழ்ச்சியுடன் அழைத்து உரையாடினார். அப்பொழுது கையில் வைத்திருந்த அந்த மூட்டையை பார்த்து என்னவென்று கேட்டு அதில் இருக்கக்கூடிய அவலை முழுமனதுடன் உண்டாராம். அப்படி அவர் சாப்பிட்ட பிறகும் குசேலரால் தன்னுடைய வறுமை நிலையை கூறி உதவியை பெற மனம் வராமல் திரும்பி வந்து விட்டாராம். அதை உணர்ந்த கிருஷ்ணர் அவர் வீடு திரும்புவதற்குள் அவருடைய வறுமை நிலையை முற்றிலும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழ வைத்தார் என்று கூறப்படுகிறது.

அப்படி குசேலர் கிருஷ்ணரை பார்த்து அவலை கொடுத்த நாள்தான் மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை. இந்த நாளில் நாமும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கிருஷ்ணர் அல்லது குருவாயூர் அப்பனை அவலை வைத்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக்கூடிய முதல் புதன்கிழமை என்பது டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் வீட்டில் இருக்கக்கூடிய கிருஷ்ணர் அல்லது குருவாயூரப்பனின் படத்தையோ சிலையையோ சுத்தம் செய்து சிவப்பு நிற ஆடையை அணிவித்து அவல் பாயசம் அல்லது அவல், தேங்காய், சர்க்கரை சேர்த்து வைத்து நெய் தீபம் ஏற்றி வைத்து துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு நிறைவடைந்த பிறகு அவல் பிரசாதத்தை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் உண்ண வேண்டும்.

இதோடு பின்வரும் இந்த மந்திரத்தை முழுமனதோடு கிருஷ்ணரை நினைத்து கூறுபவர்களுக்கு வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ”

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் கணபதி தீபம்

தன்னால் இயன்ற பொருளை முழுமனதோடு தெய்வத்திற்கு நாம் சமர்ப்பணம் செய்யும்பொழுது இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் கூட நமக்கு என்ன வேண்டுமோ அதை இறைவன் அருள்வார் என்பதுதான் இந்த குசேலரின் கதை உணர்த்துவது. அதேபோல் நாமும் முழுமனதுடன் நம்மால் இயன்றவற்றை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து இறைவனின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்