ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் உண்டாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஒரு நாளில் இருந்ததை விட அடுத்த நாள் சற்று கூடுதலான ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும் என்று நினைப்போம். வேலைக்கு செல்பவர்கள் இந்த வேலையை விட அதிக சம்பளத்துடன் வேறு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தொழில் செய்பவர்கள் இப்பொழுது சம்பாதிக்க கூடிய லாபத்தை விட அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கடைசியில் அனைவரின் குறிக்கோளும் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். நமக்கு வரக்கூடிய வருமானம் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்றால் புரட்டாசி புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூறினால் போதும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வருமானத்தை அதிகரிக்கும் மந்திரம்
காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளை நாம் அனுதினமும் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதுவெல்லாம் வேண்டுமோ அது அனைத்தையும் அவர் அருள்வார் என்றே கூறலாம். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய மாதமாக தான் இந்த புரட்டாசி மாதம் திகழ்கிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்குரிய கிழமையான சனிக்கிழமை எந்தளவுக்கு விசேஷமானதோ அதேபோலத்தான் புதன் கிழமையும் மிகவும் விசேஷமானது. இந்த நாளில் படிக்கின்ற பிள்ளைகளும் சரி வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய நபர்களும் சரி கண்டிப்பாக முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய புதன்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு புதன் ஹோரையில் செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இருக்கும் அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது ஆலயம் தொலைவில் இருக்கிறது என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். ஆலயத்திற்கு செல்பவர்கள் பெருமாளுக்கு துளசி மாலையையும், தாமரை பூவையும் வாங்கி சமர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு பெருமாளுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து முழு மனதோடு அவரை வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு கொடி மரத்திடம் வந்து அமர்ந்து கொண்டோ அல்லது கருடன் இருக்கக்கூடிய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டோ அல்லது ஆஞ்சநேயர் இருக்கக்கூடிய இடத்தில் அமர்ந்து கொண்டோ இந்த மந்திரத்தை கூறலாம். வீட்டிலிருந்து இந்த மந்திர வழிபாட்டை செய்ய விரும்புபவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலையை சமர்ப்பணம் செய்து கொள்ளுங்கள். தாமரை பூ கிடைக்கும் பட்சத்தில் அதை வாங்கி வைக்கலாம் அப்படி இல்லை என்றால் வாசனை மிகுந்த வேறு ஏதாவது மலர்களை பயன்படுத்தலாம். பெருமாளுக்கு முன்பாக நெய் தீபத்தை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு இனிப்பு பொருளை பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை 111 முறை பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு கூறுவதன் மூலம் நம்முடைய வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்.
மந்திரம்
” ஓம் வாசுதேவாய நமோ நம “
இதையும் படிக்கலாமே: நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்
பெருமாளின் திருநாமங்கள் அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த திருநாமத்தை பெருமாளுக்குரிய புரட்டாசி புதன்கிழமை அன்று சொல்லும்பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய பணம் தொடர்பான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.