காலையில் எழுந்து வாசல் கதவை திறக்கும்போது, பெண்கள் ஒருபோதும் இந்த தவறை செய்யவே கூடாது. வீட்டிற்குள் தரித்திரம் நுழைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

women3
- Advertisement -

பெரும்பாலும் காலையில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தானே முதலில் எழுந்து நிலை வாசல் கதவை திறக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். சில வீட்டில் ஆண்கள் வாசல் கதவுகளை திறப்பதாக இருந்தாலும் சரி, பெண்கள் கண்விழித்து பின்பு நிலை வாசலுக்கு சென்று வாசலை கூட்டி கோலம் போடும் போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றிய ஒரு சில சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் காலையில் பெண்கள் கண்விழித்ததும் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை பார்க்க வேண்டும். அது மகாலட்சுமி படம் ஆக இருக்கட்டும், அல்லது மற்ற தெய்வங்களின் படமாக இருக்கட்டும், அல்லது கணவர் முகத்தில் விழிப்பது ஆக இருக்கட்டும். அது அவரவர் விருப்பம். எழுந்த பின்பு காலைக் கடன்களை முடித்துவிட்டு பல்தேய்த்து முகத்தை முதலில் கழுவ வேண்டும். அதன் பின்பு உங்களுடைய தலையை முதலில் சரிசெய்ய வேண்டும். விரித்த தலையோடு, முந்தையநாள் தலையில் வைத்த காய்ந்த பூவோடு நிலை வாசல் கதவைத் திறக்கவே கூடாது.

- Advertisement -

தூங்கிய முகத்தோடு நித்ராதேவி முகத்தில் இருக்கும் போது அப்படியே சென்று நிறை வாசல் கதவை திறந்து லக்ஷ்மி தேவியை வரவேற்பது சரியான விஷயமும் அல்ல. வாசலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போடும் போது பெண்கள் தலை சீவி இருக்க வேண்டும். குறிப்பாக தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது.

நிறைய பேர் வீடுகளில் நிலை வாசலை கூட்ட பயன்படுத்தும் துடைப்பத்தை நிலை வாசலுக்கு வெளி பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். சில பேர் வீட்டில் வீட்டிற்குள் இருந்து வாசல் கூட்டை துடைப்பத்தை வெளியே எடுத்து செல்லக்கூடிய வழக்கம் இருக்கும். அப்படி இருக்கும் போது, முதலில் நிலை வாசல் கதவைத் திறக்கும் போது கையில் துடைப்பம் அல்லது குப்பை குடையோடு நிற்கவே கூடாது. (வாசல் கதவை திறந்து வைத்துவிட்டு அதன் பின்பு சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வெளியே எடுத்து செல்லலாம்.)

- Advertisement -

குளித்தாலும் குளிக்கவில்லை என்றாலும் கழுவிய முகத்தில் குங்குமப் பொட்டிட்டு கொண்டு தலையை சீவிக் கொண்டு விருந்தாளியை வரவேற்பது போல முகத்தில் ஒரு சிறிய புன்னகை உடன் நிலைவாசல் கதவை திறந்துவிட்டு, ‘மகாலட்சுமி தேவியே வருக வருக’ என்று சொல்லி அதன் பின்பு நிலை வாசல் கதவை திறப்பது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

அதிகாலை வேளையில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வருவதற்காக லட்சுமிதேவி நிலை வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த லட்சுமிதேவியை வரவேற்கும் வகையில் தான் மேல் சொன்ன விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் பின்னோக்கி சென்று பார்த்தால் பெண்கள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அதன் பின்புதான் நிலைவாசல் கதவை திறந்து வாசலில் கோலம் போடுவார்கள்.

ஆனால் இன்று நேரமின்மை காரணமாகவும் சில பல மாற்றங்களின் காரணமாகவும் பெண்களால் குளிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மகாலட்சுமி தேவியை வரவேற்க மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களை மட்டும் பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

- Advertisement -