முக வசீகரம் மந்திரம்

kaali-compressed

எதற்கும் ஒரு முகராசி வேண்டும் என சில பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஒரு சிலர் பார்ப்பதற்கு கம்பீரமாக செல்வந்தர் போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அவரை என்ன காரணத்தினாலோ பலருக்கும் பிடிக்காமல் இருக்கும். ஆனால் வேறு சிலர் பார்ப்பதற்கு சாதாரணமாக, மிக எளிமையாக இருந்தாலும் அவரை பார்த்த உடன் அனைவருக்கும் அவரை பிடிக்கும் அதற்க்கு பெயர் தான் வசீகரம். அந்த வகையில் ஒருவர் முக வசீகரம் பெறுவதற்கான மந்திரம் இதோ.

om manthiram

வசீகரம் மந்திரம்

“ஓம் ஏம் நம”

சித்தர்கள் உருவாக்கிய ஆற்றல் மிக்க மந்திரம் இதுவாகும். இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனையும், சித்தர்களையும் மானசீகமாக வணங்கி கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து, 1008 முறை உரு ஜெபிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும். இக்காலங்களில் தீய வாடிக்கைகள் எதிலும் ஈடுபட கூடாது. இதனால் மந்திர சித்தி ஏற்பட்டு உங்களுக்கு “சர்வ வசியம்” உண்டாகி, நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும் நிலை ஏற்படும்.

Siddhar

மக்களின் நன்மைக்காக பல கலைகளை கண்டுபிடித்து உலகிற்கு அளித்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட கலைகளில் ஒன்று தான் மாந்திரீக கலை. இக்கலையை பற்றி சித்தர்கள் சிலர் வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்ததற்கு காரணம் யாரொருவரும் இந்த மாந்திரீகத்தை கொண்டு தனக்கும், பிறருக்கும் நன்மைகளை ஏற்படுத்திக்கொள்வதற்காகத்தான். இதில் ஒரு பிரிவு தான் வசியம் செய்யும் மந்திரங்கள். மூலிகை செடிகள், மிருங்கங்கள், ஆண் பெண் வசியம், சர்வ ஜன வசிய மந்திரங்கள் உள்ளன. இத்தகைய வசிய மந்திரங்களை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் சரியான விதத்தில் உபயோகித்து உங்கள் வாழ்வை இன்பமானதாக ஆக்கிக்கொள்வது சிறந்ததாகும்.

இதையும் படிக்கலாமே:
வெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்

English Overview:
Here we have Vashikaran mantra in Tamil. By chanting this mantra 1008 times daily for 48 days then one can get good look.