வயிற்றில் இருக்கும் வசிய மருந்தை வேரோடு வெளியே எடுக்க, சாப்பாட்டோடு சேர்த்து இதை சாப்பிடுங்கள் போதும்.

amman
- Advertisement -

செய்வினை பில்லி சூனியம் போன்ற சூழ்ச்சியின் வரிசையில், சாப்பாட்டோடு கலந்து ஒரு மனிதனுக்கு வசிய மருந்து கொடுப்பது என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதை சிலபேர் இடுமருந்து என்றும் சொல்லுவார்கள். அதாவது ஒருவர் நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக அவருக்கு தெரியாமலேயே சாப்பாட்டில் மருந்தை கலந்து கொடுத்து விடுவார்கள். மருந்து கலந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டால் அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது, எதையோ இழந்தது போல பித்து பிடித்தது போல சோர்வாகக் காணப்படுவார்கள். அழகான தோற்றம் மெலிந்து நோயாளி போல மாறிவிடுவார்கள்.

சிலபேர் காலப்போக்கில் உயிர் இழக்கும் அளவிற்கு கூட சக்தி வாய்ந்ததாக இந்த இடுமருந்து வைக்கப்படும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் நமக்கு தெரிந்த மாந்திரீகரிடம் சென்று பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. வீட்டில் இருந்தபடியே இதற்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக நல்லதொரு மாற்றம் தெரியும்.

- Advertisement -

அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறைதான் இது. வெண்பூசணிக்கு வயிற்றில் இருக்கும் கெடுதலை வெளியே தள்ள கூடிய சக்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. திருஷ்டி பூசணிக்காய் என்று சொல்லுவார்கள் அல்லவா. சமையலுக்கு பயன்படுத்தும் வெண்பூசணி. அதை வாங்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு தோல் சீவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் இந்த சாரை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நம் வயிற்றில் இருக்கும் இடு மருந்து முழுமையாக வெளியேறி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது அல்லாமல் அடிக்கடி வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ இந்த வெண்பூசணியே சாம்பார் வைத்து சாப்பிட்டு வரும் போதும் நம்முடைய வயிற்றில் இருக்கும் கெடுதல் அனைத்தும் வெளியேறிவிடும். அடுத்தபடியாக சொல்லப்பட்டிருப்பது முள்ளங்கி. வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய முள்ளங்கியை அடிக்கடி நம்முடைய சாப்பாட்டோடு சேர்த்து கொண்டால் நம்முடைய வயிற்றில் எந்த கெடுதலும் தங்காது.

- Advertisement -

சில பேர் குறிப்பிட்ட ஒரு நபர் நமக்கு வசியமாகி இருக்க வேண்டும் என்பதற்காக கூட வசியமருந்தை இப்படி சாப்பாட்டில் கலந்து கொடுத்து விடுவார்கள். வசிய மருந்தை முறியடிப்பதற்கும் இந்த வெண்பூசணி முள்ளங்கியையும் சாப்பிட்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதேபோல புளிப்பு தன்மை அதிகமாக இருக்கக் கூடிய பொருட்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் இடுமருந்து முறியடிக்கப்படும். குறிப்பாக வாரத்தில் ஒருநாள் புளிப்பு சுவை நிறைந்த மிளகு சேர்த்த ரசம் சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -