- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாஸ்து தோஷம் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமைய

வாஸ்து தோஷம் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமைய

- Advertisement -

நாம் இருக்கக்கூடிய வீட்டில் வாஸ்து என்பது சரியாக இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். வாஸ்து கோளாறுகள் இருக்கக்கூடிய வீட்டில் எந்தவித சுப காரியங்களும் நடைபெறாது, வீட்டில் நிம்மதியே இருக்காது, சண்டை சச்சரவுகள் என்று வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டை கட்டினாலும் அந்த வீட்டில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் இருந்தால்தான் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

அப்படி ஒருவேளை வாஸ்து தோஷம் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அதை நிவர்த்தி செய்வதற்குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிக்கு அதிக அளவில் செலவுகள் ஏற்பட்டாலோ அல்லது வாடகை வீட்டில் இருக்கிறோம் எப்படி வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்வது என்று யோசிப்பவராக இருந்தாலும் வாஸ்து நாளில் நாம் சில சூட்சமமான வழிபாட்டுகளை செய்தால் போதும், வாஸ்து தோஷம் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வாஸ்து தோஷம் நீங்க

இந்த வழிபாட்டை மார்ச் மாதம் ஆறாம் தேதி மாலை 6 மணியில் இருந்து 7மணிக்குள் செய்யவேண்டும். இதற்கு புதிதாக ஒரு செங்கல் கல் வேண்டும். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு அந்த செங்கலில் மஞ்சளை குழைத்து முழுவதுமாக தடவி வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த செங்கலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பாதியில் மஞ்சளையும் ஒரு பாதியில் குங்குமத்தையும் வைத்து வைக்க வேண்டும். செங்கலுக்கு நடுவே சுத்தமான புணுகை தடவி அதற்கு மேல் குங்குமத்தை வைத்து அந்த குங்குமத்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த செங்கலுக்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு பச்சரிசி மற்றும் வெல்லத்தை கலந்து வைத்து விடுங்கள். இப்பொழுது வாசனை நிறைந்த மலர்களை பயன்படுத்தியோ அல்லது நாணயத்தை பயன்படுத்தியோ பின்வரும் வாஸ்து பகவானுக்குரிய மந்திரத்தை 27 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் அனைத்தும் நீங்க வேண்டும், சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கற்பூரம் முழுவதும் எரிந்து முடித்த பிறகு செங்கலுக்கு முன்பாக வைத்திருந்த பச்சரிசி வெல்லத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வீட்டை சுற்றி இருக்கக்கூடிய நான்கு மூலைகளிலும் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் முற்றிலும் நீங்கும்.

மந்திரம்

“ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோக ராஜாய தீமஹி
தன்னோ வாஸ்து ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாமே:நல்ல கணவன் அமைய மந்திரம்

முழு நம்பிக்கையுடன் வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும், சொந்த வீடு அமைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து இந்த முறையில் பூஜை செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்