வீட்டில் செல்வ கடாட்சம் நிலைக்காமல் போவதற்கு இந்த தவறுகளும் ஒரு காரணம் தான். இதுவரை நீங்கள் அறியாத சில விஷயங்கள் உங்களுக்காக!

mahalashmi

வாஸ்துப்படி நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தும் வீட்டில் செல்வ கடாட்சம் நிலைக்க வில்லை என்பதுதான் பெரும்பாலும் நிறைய பேருடைய வருத்தமாக இருக்கின்றது. வாஸ்துப்படி நம்முடைய வீட்டை அமைத்துக் கொண்டாலும், நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் மூலம் நம்முடைய வீட்டிற்கு கஷ்டம் வரத்தான் செய்யும். அதில் சில தவறுகளை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் நம்முடைய வரவேற்பறையை முதலில் நாம் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

living-room

வீட்டிற்குள் நுழைபவர்களை முதலில் வரவேற்று நாம் அமர வைப்பது இந்த வரவேற்பறையில் தான். இதற்கு அர்த்தம், வீட்டிற்குள் நுழையும் மகாலட்சுமியும் முதலில் அமரப் போவது நம்முடைய வரவேற்பறையில் தான். வீட்டின் வரவேற்பறை புதனுக்கு சொந்தமான ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. புதன் பகவான் இருக்கக்கூடிய இடத்தில் சிவப்பு நிற பொருட்கள் இருக்கவே கூடாது. அதாவது வரவேற்பறையில் சிவப்பு நிறத்தில் ஸ்கிரீன் சிவப்பு நிறத்தில் மின் விளக்குகள், சிவப்பு நிறத்தில் சோபா, சிவப்பு நிறத்தில் பெயிண்ட் போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிக மிக நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் மங்களகரம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் உங்களுடைய வரவேற்பறை எப்போதுமே மங்களகரமாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தால் முடிந்தவரை உங்களுடைய வரவேற்பறையை அலங்கரித்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற புடவை உடுத்திய மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை வரவேற்பறையில் எல்லோருக்கும் தெரியும்படி மாட்டி வைப்பது மிகவும் நல்லது.

bed

நிறைய பேருடைய வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக கட்டிலை வரவேற்பறையில் போட்டு வைத்திருப்பார்கள். இது கட்டாயமாக வீட்டிற்கு பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு, இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வேறு வழியே கிடையாது. கட்டிலை வரவேற்பறையில் தான் போடவேண்டும் என்று இருந்தாலும், அந்த கட்டிலை பகல் நேரத்தில் நீங்கள் படுத்து உறங்குவதற்கு பயன்படுத்தவே கூடாது.

- Advertisement -

மடித்து வைக்கக்கூடிய வசதி உள்ள கட்டில் ஆக இருந்தால் அந்தக் கட்டிலை பகல் நேரத்தில் மடித்து வைத்து விடுவது மேலும் சிறப்பு. அடுத்தபடியாக நமக்கு இருக்கக்கூடிய எதிரிகள் பிரச்சனைகளிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது. அந்த காலத்தில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை கவனித்தால் உங்களுக்கு நன்றாகவே தெரியும். திண்ணைகள் மாடங்கள், பக்கவாட்டில் சிங்க முகங்கள், யானை, மான் முகங்கள் இப்படிப்பட்ட மிருகங்களின் உருவங்களை வடிவமைத்து வைத்திருப்பார்கள்.

living-room1

இன்னும் பின்னோக்கி சென்றால் அரண்மனையில் ராஜாக்கள் சிங்க முகம், புலியின் முகம், மான் கொம்புகள் பெரிய எருமை மாட்டின் தலை போன்ற விஷயங்களை தங்களுடைய அரண்மனையில் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட விலங்கு சம்பந்தப்பட்ட உருவங்களை நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டால், எதிரிகளின் தொல்லை இருக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

living-room2

ஆனால் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை வேட்டையாடுவது போல மிருகங்கள் சண்டை போட்டுக் கொள்வது போல, ஆக்ரோஷமாக வன்முறையை தூண்டும் மிருக படங்களை எல்லாம் வரவேற்பறையில் வைக்கக்கூடாது. அமைதியாக இருக்கக் கூடிய சிங்கம், புலி, மான், போன்ற விலங்குகளின் படத்தை வரவேற்பறையில் அழகாக வைத்துக் கொண்டால் எதிரிகளின் தொல்லை நமக்கு இருக்காது. கண் திருஷ்டியால் பிரச்சனைகள் வராது என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேற்சொன்ன விஷயங்களை உங்களுடைய வீட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நல்லதே நடக்கும் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.