வாஸ்து பிரச்சினைகளை தீர்க்கும் இந்த பொருட்களை எல்லாம் உங்க வீட்ல வச்சிருக்கீங்களா? இந்தப் பொருட்களின் மூலம் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

hourse
- Advertisement -

அடடா, வாஸ்து பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய இந்த பொருட்களை எல்லாம் வீட்டில் வைத்தால் பிரச்சனை வந்துவிடுமா என்ன, என்று நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இந்த பொருட்களை எல்லாம் வீட்டில் வைப்பதன் மூலம் முதலில் நமக்கு எந்த பிரச்சனையும் வராது. இருப்பினும் சில பொருட்களை வைப்பதற்கு என்று, சில திசைகளும் சில இடங்களும், சில அமைப்புகளும் உள்ளது. அந்த முறைப்படி இந்த வாஸ்து பொருட்களை வைப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமாக இருக்கும். சரியான இடத்தில் இந்த பொருட்களை வைக்க வில்லை என்றால், அந்த குறிப்பிட்ட பொருட்களின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறைவாக கிடைக்கும். அவ்வளவு தான். அந்த வாஸ்து பொருட்களின் வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது மூன்று பொருட்களை பற்றித்தான். ஓடுகின்ற 7 குதிரை படம், கண்ணாடி, மணி பிளான்ட், இந்த மூன்று பொருட்களை வீட்டில் சரியான இடத்தில் எப்படி வைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

7-horse2

பெரும்பாலும் இப்போது நிறைய பேர் வீடுகளில் குதிரை படம் ஓடுவது போல, ஏழு குதிரைகள் ஒன்றாக ஓடுவதுபோல உள்ள புகைப்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை தரக்கூடியதுதான். இந்த குதிரை படத்தை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழும். பெரும்பாலும் இந்த குதிரை படத்தை வரவேற்பறையில் தான் மாட்டி வைத்து இருப்போம் அல்லவா.

- Advertisement -

ஆனால், வரவேற்பறையில் இருக்கும் குதிரை படம் அப்படியே இருக்கட்டும். இன்னொரு குதிரை படத்தை வாங்கி உங்கள் வீட்டு படுக்கை அறையில் மாட்டி வையுங்கள். காலையில் கண்விழித்ததும் இந்த ஓடுகின்ற குதிரையை பார்க்கும்போது நம்மை அறியாமலே நமக்குள் ஒரு உத்வேகம் வரும். அந்த உத்வேகம் நம்மை தூண்டிவிடும். அந்தத் தூண்டுதல் நம்முடைய வாழ்க்கைக்கு ஊன்று கோலாக அமையும். தினமும் காலையில் இந்த ஏழு குதிரை படத்தில் கண்விழித்து தான் பாருங்களேன். உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்று நிச்சயம் உங்களுக்கே புரியும்.

mirror

அடுத்தபடியாக கண்ணாடி. தங்கம் வெள்ளி இல்லாத வீடுகள் கூட இருக்கும். ஆனால் கண்ணாடி இல்லாத வீடு நிச்சயமாக இருக்கவே முடியாது. நம்மை நமக்கே முழுமையாக பிரதிபலித்து காட்டக்கூடிய சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. நம் வீட்டிற்கு நிறைய நன்மையை கொடுக்கக்கூடிய இந்த கண்ணாடியை, வீட்டில் சதுர வடிவில் அல்லது செவ்வக வடிவில் தான் மாட்ட வேண்டும்.

- Advertisement -

வட்டவடிவில் இருக்கக்கூடிய கண்ணாடியை வீட்டில் மாட்டி வைப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி வைப்பது வீட்டிற்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் கண்ணாடி எப்போதுமே உங்கள் வீட்டு தரையில் இருந்து மூன்றில் இருந்து நான்கு அடி மேல் பக்கத்தில்தான் இருக்க வேண்டும். தரையிலிருந்து, தரையை தொட்டவாறு வீட்டில் கண்ணாடியை வைக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. தரையிலிருந்து நான்கு அடிக்கு மேலே எத்தனை உயரத்தில், எவ்வளவு பெரிய கண்ணாடியை வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் கண்ணாடியை நீங்கள் பார்க்கும்போது கம்பீரத்தோடு, உங்கள் அழகை மேம்படுத்திக் கொண்டு, பார்க்க வேண்டும். சோகமாக துயரமாக சோர்வடைந்து கண்ணாடியை பார்க்கக் கூடாது.

money-plant1

அடுத்தபடியாக பெரும்பாலும் இப்போது எல்லோர் வீட்டிலும் மணி பிளான்ட் வளர்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த மணி பிளாண்ட்டை குறிப்பாக உங்களுடைய வீட்டின் வடகிழக்கு அல்லது தென் கிழக்கு பகுதியில் வைத்து வளர்த்து வந்தால் அந்த மணிபிளான்ட் செழிப்பாக வளர தொடங்கும் உங்கள் வீட்டில் பண புழுக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். சில பேர் வீடுகளில் மணி பிளான்ட் சரியாக வளராது. இப்படிப்பட்டவர்கள் நீங்கள் மணி பிளாண்ட் வைத்து இருக்கும் திசையை கொஞ்சம் மாற்றி வைத்து பாருங்கள்.

Money plant

உங்க வீட்டில மேல் சொன்ன பொருட்களை எல்லாம் எந்தெந்த இடத்தில் வச்சிருக்கீங்க. கொஞ்சம் மாற்றித்தான் பார்ப்போமே. நல்ல மாற்றம் நிகழ்ந்தால் அது நமக்கு நன்மை தரக்கூடிய விஷயம் தானே. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -