உங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும். அதற்கான பரிகாரம் தான் இது.

vastu-home

முடிந்த வரை சொந்த வீடு கட்டுவதற்கு முன்பாகவே, நீங்கள் வாங்கி இருக்கும் நிலத்தில் தோஷங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று, அந்த மண்ணை பரிசோதனை செய்து, அதற்கான தோஷ நிவர்த்தி செய்துவிட வேண்டும். நீங்கள் வாங்கியிருக்கும் நிலத்தின் மண், சிவப்பு நிறமாக இருந்தால் அது வீடு கட்டுவதற்கு மிகவும் உகந்தது. வெள்ளையும் சிவப்பும் கலந்து சில இடங்களில் மண் இருக்கும். அதுவும் நல்லது தான். ஆனால், கருப்பு நிறத்தில் மண் இருக்கும் இடத்தில் வீடு கட்டுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

black-soil-land

சரி. நிலத்தை வாங்கி விட்டோம். வீட்டையும் கட்டி விட்டோம். அந்த வீட்டில் குடி வந்த நாளிலிருந்தே பிரச்சனை. சந்தோஷம் இல்லை. கடன் தொல்லை. செய்யும் வேலைக்கு பிரச்சனை. உடல் ஆரோக்கியம் இல்லை. சண்டை சச்சரவுகளுக்கு குறைவே இல்லை. இப்படி தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்ன செய்யலாம்? இதற்கான தீர்வை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே எல்லோரது வீடுகளிலும், வாசக்கால் வைப்பதற்கு முன்பாக, பூமிக்கு அடியில் சக்கரம், நவ தானியம், பஞ்ச லோகம், பால், சந்தனம் இப்படிப்பட்ட இன்னும் சில பொருட்களை போட்டுத்தான், வாசக்கால் வைப்பார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

boomi-poojai

ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அந்த வீட்டில் பூஜை அறையும், சமையலறையும் தான். ஒரு வீட்டின் சமையலறையானது, அந்த வீடு அமைந்திருக்கும் திசைக்கு ஏற்ப சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல் பூஜை  அறையும்.

- Advertisement -

நீங்கள் உங்களது வீட்டை கட்டி முடித்து இருந்தாலும் சரி. இனி கட்டப் போவதாக இருந்தாலும் சரி. உங்கள் பூஜை அறையில் வடகிழக்கு மூலையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது, பூஜை அறைக்குல் சென்றாள் வடகிழக்கு மூலை எது என்று பாருங்கள்.

vastu 1

அந்த வடகிழக்கு மூலையில் சிறியதாக, ஒரு அடி ஆழத்தில் பள்ளத்தை தோண்டி, அதனுள் முதலாவதாக ஒரு ஸ்ரீசக்கரம், அதற்குமேல் பால், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர், வில்வ இலை, வெட்டிவேர், செம்பு நாணயங்கள் கிடைத்தால் அதை போடலாம். ஒரு ரூபாய் நாணயம் 5, கிராம்பு 5 இந்த பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பள்ளத்திற்குள் போட்டு மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.

அந்த இடத்தில் மட்டும் ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் அந்த வீட்டிற்கு குடிவந்த பிறகு, அந்த இடத்தை காலால் மிதிக்க கூடாது. அந்த இடத்தில் எப்போதும் ஒரு சிறிய சொம்பில் முழுமையாக தண்ணீர் வைத்து, வழிபாடு செய்துவந்தோமேயானால், வீட்டில் சந்தோஷம் நிலைத்து இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

sembu-sombu

அந்த சொம்பல் நீங்கள் வைத்திருக்கும் தண்ணீரை தினம்தோறும் குளித்தபின்பு, மாற்றி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடு மூலம், உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் கூட, சிரமம் பார்க்காமல் உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இனி தான் வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை வீடு கட்டும் போதே செய்து கொள்ளலாம். இப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் வீடு எப்போதும் லட்சுமி கலாச்சாரத்தோடு நிம்மதி நிறைந்ததாக இருக்கும். எப்படிப்பட்ட வாஸ்து தோஷம் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
குபேர மூலையில் இந்த பொருட்களை வைத்தால் கஷ்டம் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu problem solution in Tamil. Vastu problem. Veedu vastu kurippugal Tamil. vastu for house. Vastu kurippugal Tamil.