உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சினையால், தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா? வீட்டை இடித்து வாஸ்துவை சரிசெய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு தீர்வு தரும் தீபம்.

vastu
- Advertisement -

நமக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை, என்று நம்புபவர்களுக்கு கஷ்டமே கட்டாயம் வராது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் யாராவது ஒருவர் வந்து, ‘வீடு இப்படி இருக்க கூடாதே, இப்படி இருந்தால் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதே’ என்று சொல்லிவிட்டு சென்றால் போதும். சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் கூட கட்டாயம் குழப்பம் வரத்தான் செய்யும். இதனால் நம் வீட்டில் பிரச்சினைகள் வந்து விடுமோ? என்ன செய்வது என்ற அந்த எதிர்மறை எண்ணமே நம் வீட்டில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணமாக மாறிவிடும்.

vastu

இதற்காக வாஸ்து தோஷங்களும் சாஸ்திரங்களும் பொய்யென்று சொல்லப்படவில்லை. ஆனால் தோஷங்களாலும் ஜாதகத்தினாலும் பிரச்சனைகள் ஏற்படுவதை விட, நம்முடைய எதிர்மறை ஆற்றலால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தான் அதிகம். உங்களுடைய வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தாலும் சரி, உங்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷத்தால் பிரச்சனை இருந்தாலும் சரி, முதலில் அந்த குறைபாடுகளில் மூலம் நமக்கு கெட்டதுதான் நடக்கும் என்ற எண்ணத்தை மாற்றி, இதன் மூலம் நமக்கு கட்டாயம் நன்மையும் ஏற்படும் என்ற நேர்மறை சிந்தனை எவர் ஒருவருக்கு வருகின்றதோ, அவர் கட்டாயம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உங்களுக்கு ஏதேனும் மனகுழப்பம் உள்ளதா. வாஸ்து பிரச்சினையால் தான் உங்கள் வீட்டில் பிரச்சனைகள் உண்டாகிறது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். முதலில் உங்கள் வீடு கிழக்கு பார்த்த வாசல் அல்லது வடக்கு பார்த்த வாசல், அதாவது உங்கள் வீட்டு நில வாசல் படி கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் உங்களுக்கு அதிகப்படியான பாதிப்பை தராது என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும்.

vasal-kathavu

உங்களுடைய நில வாசல்படி மேற்கு நோக்கியோ அல்லது தெற்கு நோக்கியோ இருக்கின்றது, வீட்டின் அமைப்பு உங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை, என்ன செய்வது. அந்த வாஸ்து பிரச்சினையை, இடித்து சரி செய்யும் அளவிற்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகளும் குறைவாக உள்ளது என்ன செய்யலாம்? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த 2 தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்ற வேண்டும். உங்களுடைய வீட்டில் பின் வாசல் கதவு இருந்தால் பின்வாசல் கதவின் வாசல் படிகளில் இரு பக்கத்திலும், 2 மண் அகல் தீபங்கள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு அந்த தீபத்தை வீட்டிற்கு வெளியே பார்த்தவாறு ஒளிர விடவேண்டும். தீபத்தின் சுடர் வீட்டின் வெளிப்பக்கம் பார்த்தவாறு எரிய வேண்டும்.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் கட்டாயம் பின்வாசல் இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில், பின்புறம் உள்ள ஜன்னல் பக்கத்திலும், இப்படி தீபங்களை ஏற்றி வைக்கலாம். பின்பக்கம் ஜன்னலும் வைக்கவில்லை என்றால் உங்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எந்த ஜன்னல் இருக்கின்றதோ அந்த ஜன்னலில் வீட்டின் வெளிப்பக்கம் பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்றி வைப்பது மிக மிக நல்லது.

deepam

பூமிகாரகன் என்று சொல்லும் செவ்வாய் பகவானை செவ்வாய்க்கிழமை அன்று நினைத்து, நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றி வைத்தால் வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். அதாவது அந்த வாஸ்து பிரச்சனையால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகமாக ஏற்படாது. சுக்கிர பகவானை நினைத்து வெள்ளிக்கிழமையும் இந்த தீபங்கள் இதே முறைப்படி ஏற்றி வைக்க வேண்டும். சுக்கிர பகவானின் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

vastu 1

இந்த தீபத்தை கட்டாயம் மாலை 6 மணிக்கு மேல் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு தான் ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றி வந்தால் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் தானாக குறையும். வீட்டை இடித்து கட்ட முடியாது என்ற சூழ்நிலையில் பிரச்சனையை சரி செய்வதற்கு முடிந்தவரை அந்த பிரச்சனைகள் மூலம் நமக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது.

இதையும் படிக்கலாமே
பச்சை கற்பூரத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? பணம் பல மடங்கு பெருக, நீங்களும் முயற்சி செய்து தான் பாருங்களேன்! உங்கள் கையிலும் பணம் கட்டுக் கட்டாக சேர புது வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -