உங்களுக்கு பொருளாதார லாபங்களை தரக்கூடிய வாஸ்து குறிப்புக்கள் இதோ

vastu

உயிர்கள் அனைத்திற்கும் வசிப்பிடம் ஒன்று இருக்கிறது. அதில் மனிதர்கள் மிகச் சிறப்பான முறையில் தாங்கள் வசிப்பதற்கான வீடுகளை கட்டிக் கொள்கிறார்கள். தெய்வங்கள் வாசம் புரியும் இல்லங்களை திருக்கோயில் என அழைக்கின்றோம். அதுபோல நம் வீட்டிலும் தெய்வங்களின் சக்திகள் நிறைந்து நமக்கு நன்மை செய்ய சில எளிய வாஸ்து விதியினை கடைப்பிடிப்பதால் சாத்தியமாகும். அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் நாம் வசிக்கின்ற வீட்டில் இறைசக்தி நிறைந்திருந்தால் நமக்கும் நமக்கு பிறகான பல தலைமுறைகளை கடந்த சந்ததியினருக்கும் நன்மைகளைச் செய்யும். அப்படி மிக உயர்வான சக்திகள் நமது வீட்டிற்குள் நிறைந்து, நமது பொருளாதார மேன்மைகளையும், வளமையும் தருவதற்கு குறிப்பிட்ட சில வாஸ்து முறைகளை செயல்படுத்துவதால் நிச்சயம் பலன்கள் ஏற்படும்.

எந்த ஒரு வீட்டிற்கும் வாயிற்கதவு என்பது முக்கியமான ஒன்றாகும். வாயிற்கதவும் மற்றும் வீட்டில் இருக்கின்ற அனைத்து கதவுகளும் உட்புறமாகத் இருக்கும் வகையில் அமைக்கப்படுவது, வீட்டிற்குள் தெய்வீக சக்திகள் வழிவகை செய்யும். மேலும் கதவுகளை திறந்து மூடும்போது சத்தம் ஏற்படாத வகையில் அவ்வப்போது கதவுகளை வாயிற்படியோடு இணைத்து பிடித்திருக்கும் கீழ்களுக்கு எண்ணெய் விட்டு வர வேண்டும்.

entry-storm-sliding-doors

வீட்டின் எந்த ஒரு அறையையும் சதுரமான நான்கு மூலைகள் மட்டுமே கொண்ட வகையில் அமைக்கப்பட வேண்டும். ஐந்து மூலைகள் கொண்ட வகையில் அறைகளை அமைத்தால் அந்த அறையில் எதிர்மறையான சக்திகள் உருவாக வழிவகை செய்யும். கழிவறைகள் கட்டும் போது பீங்கான் கழிவுத் தொட்டியை எப்போதும் வடக்கு – தெற்கு திசையை பார்த்தவாறு அமைக்க வேண்டும். மேலும் கழிவறை மற்றும் குளியலறைகளை பயன்படுத்தாத நேரத்தில், அந்த அறைக் கதவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

- Advertisement -

fountain

செயற்கை நீரூற்றுக்கள் அமைக்க விரும்புபவர்கள் மற்றும் நீர் சார்ந்த ஓவியங்களை மாட்ட நினைப்பவர்கள் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் மட்டுமே இவற்றை அமைக்க வேண்டும். இது உங்களுக்கு சிறந்த பொருளாதார லாபங்களையும், அனைத்து காரியங்களில் வெற்றி பெறும் யோகத்தையும் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீடு வாஸ்து பலம் பெற இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for prosperity in Tamil. It is also called as Vastu shastra tips in Tamil or Veedu vasthu vithigal in Tamil or Vastu shastra kurippugal in Tamil or Vastu vithigal in Tamil.