இந்த தோஷம் உங்கள் வீட்டு மனையில் இருந்தால், கட்டாயம் வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது.

vasthu

பொதுவாகவே ஒருவர், வீடு வாங்குவதாக இருந்தாலோ அல்லது நிலம் வாங்குவதாக இருந்தாலோ அந்த சொத்தில் ஏதாவது வாஸ்து பிரச்சனை இருக்கிறதா என்று பார்த்து தான் வாங்குவார்கள். இருந்தும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில், விதியின் வசத்தால் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வாஸ்து பிரச்சனையை பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாஸ்து நிபுணர்களுக்கு இந்த தோஷம் கட்டாயமாக தெரியும். ‘சல்லிய தோஷம்’ என்று சொல்லப்படும் ஒரு வாஸ்து தோஷத்தினால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சோழி

அந்தக் காலங்களில் பிரசன்னம் பார்ப்பதன் மூலம் இந்த சல்லிய தோஷத்தை கண்டறிவார்கள். ஒரு நிலத்தை புதிதாக வாங்கிய உடன் சல்லிய தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சில பேர் இப்படி ஒரு தோஷம் இருப்பதே தெரியாமல் அந்த இடத்தில் வீட்டை கட்டி விட்டால், அதன் மூலம் வீட்டின் நிம்மதி சந்தோஷம் நிலையாக இருக்காது. பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்க, இந்த தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக சல்லிய தோஷம் என்றால் என்ன? அது எதனால் வருகிறது என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்கியிருக்கும் நிலமாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அல்லது பலநூறு வருடங்களுக்கு முன்பு, வேறு எந்த இடமாக வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். அதாவது அந்த இடத்தில் இறந்த விலங்குகளை புதைத்திருக்கலாம். இறந்த மனிதர்களையும் புதைத்திருக்கலாம். மனிதர்களின் நகம், முடி, எலும்பு இவை ஏதாவது அந்த நிலத்தின் அடியில் இருந்தால் உருவாகும் தோஷம்தான் சல்லிய தோஷமாகும்.

காலியான இடத்தில் சல்லிய தோஷம் இருந்தால், அதை சுலபமாக நீக்கி விட முடியும். இந்த நவீன காலகட்டத்தில் நவீன இயந்திரங்களை வைத்து 3 அடிவரை அந்த மனையில் இருக்கும் மண்ணை தோண்டி நீக்கிவிட்டு, புதியதாக மண்ணை கொட்டி விட்டால் இந்த தோஷமானது நீங்கிவிடும். சிலபேர் தோஷம் இருப்பதே தெரியாமல், தான் வாங்கிய நிலத்தில் வீடு கட்டி முடித்து இருப்பார்கள். அல்லது கட்டிய வீட்டையே வாங்கியிருப்பார்கள்.

- Advertisement -

அந்த நிலத்தில் சல்லிய தோஷம் இருக்கும். இப்படி இருந்தால் என்ன செய்வது? இதற்கான சித்தர்களால் சொல்லப்பட்ட, ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தினை, உங்களது வீட்டு வடகிழக்கு மூலையில் காலி இடத்தில் செய்ய வேண்டும். ஒரு அடி அகலத்தில், ஒரு அடி ஆழத்தில் குழி தோண்டிக் கொள்ளுங்கள். அந்த குழி மண்ணை எடுத்துக் கொண்டு போய் உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை தண்ணீரில் கரைத்து விட்டு, அங்கிருந்து ஆற்று மணலை கொஞ்சம் எடுத்து வீட்டிற்கு வரவேண்டும். ஊரின் அருகில் ஆறு இல்லாதவர்கள், கடல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம்.

kuzhi

அதன் பின்பு இரவு ஒன்பது மணிக்கு மேல், உங்கள் வீட்டில் தோண்டி வைத்திருக்கும் குழியில், பன்னீருடன், சிறிதளவு மஞ்சள்தூள், வெள்ளை சுண்ணாம்பு, சர்க்கரை இவைகளை நன்றாக கரைத்து அந்த குழிக்குள் முதலில் ஊற்றி விட்டு, அதன் பின்பு ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணையும் அந்த குழிக்குள் போட்டு நன்றாக மணலை தள்ளி குழியை மூடி விடுங்கள்.

இறுதியாக எலுமிச்சை பழம், பூசணிக்காய், தேங்காய் இவை மூன்றையும் தனித்தனியாக, 3 முறை அந்த குழியை சுற்ற வேண்டும். எலுமிச்சை பழத்தை அறுத்து நான்கு திசைகளிலும் போட்டுவிடுங்கள். பூசணிக்காயும், தேங்காயையும் முச்சந்திக்கு சென்று உடைத்து விடுங்கள். சல்லிய தோஷம் உள்ள மனையில் வீடு கட்டி இருந்தால், இந்த பரிகாரத்தை முறையாக செய்யும்பட்சத்தில் அந்த தோஷத்தினால் நமக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாக தடுக்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
வாஸ்துவினால் தான் உங்கள் வீட்டில் பிரச்சனையா? வாஸ்து தோஷம் தீர்க்க மிகவும் சுலபமான வழி இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu salliya dosha pariharam in Tamil. Vastu pariharam Tamil. Vastu palangal Tamil. Vastu tips for home Tamil. Vastu dosha pariharam Tamil.