- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டம் தரும் ஸ்படிக தாமரை

அதிர்ஷ்டம் தரும் ஸ்படிக தாமரை

- Advertisement -

பிரபலமான ஃபெங் ஷுய் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால், அதிர்ஷ்டமிக்கவையாக கருதப்படுவதாக சொல்லப்படுகிறது. அதில் இந்த ஸ்படிக தாமரையும் ஒன்று! படிக தாமரை வாஸ்து ரீதியாக பேரதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு பொருளாக நம்பப்படுகிறது. அதிர்ஷ்டம் தரும் ஸ்படிக தாமரை பற்றிய சுவாரசியமான வாஸ்து சார்ந்த தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

கண்ணாடி போல ஸ்படிகம், ஒளி பொருந்தியதாக இருப்பதால் ஒளியை கிரகித்து நேர்மறையான ஆற்றல்களை வெளியிடக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. தாமரை, சேற்றில் வேரூன்றி இருந்தாலும், அதன் மலர் நீர் மீது அழகாகவும், களங்கமின்றியும் பூக்கும். இதனால், இது பரிசுத்தமான தூய்மை, ஆன்மீக விழிப்புணர்வு, துன்பத்தின் மீதான வெற்றி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் ஸ்படிக தாமரை வீட்டில் அல்லது அலுவலகங்களில் வைக்கப்படுகிறது.

- Advertisement -

அலுவலகங்களில் இந்த ஒளியை ஈர்க்கக்கூடிய ஸ்படிக தாமரையை வைப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். தொழில் வளர்ச்சியை துரிதப்படுத்தி மென்மேலும் வளர ஊக்குவிக்கும். தடைகளை தாண்டிய வெற்றியை கொடுக்கும். எதிரிகளை துவம்சம் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது. சண்டை, சச்சரவுகள் இல்லாமல் அமைதியை நிலைநாட்டும். மென்மையான அதிர்வலைகளை எழுப்பக் கூடியது என்றும் போற்றப்படுகிறது.

இந்த ஸ்படிக தாமரை பல வேறு வண்ணங்களில் கிடைக்கப்பெறுகிறது. பொதுவாக வெண்மை நிறங்களில் தான் அதிகம் காணப்படுகிறது. மேலும் சிகப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களிலும் கிடைக்கப்பெறுகிறது. ஒவ்வொரு வண்ணமும், ஒவ்வொரு விதமான ஆற்றல்களை பிரதிபலிக்கும். பொதுவாக வெண்மை மனத் தூய்மையையும், ஒளியை ஈர்த்து கிரகித்து நேர்மறை ஆற்றல்களையும் வெளியிடும். இதனால் வீட்டில் நல்ல வைப்ரேஷன் இருக்கும். வரவேற்பறையில் இந்த ஸ்படிக தாமரையை வைப்பதால் பேரதிர்ஷ்டம் வரும். சுத்தமான இடத்திலும், தூசுகள் இல்லாத பகுதிகளிலும் வைப்பது நல்லது. ஒளி அதிகமாக இருக்கும் இடங்களில் வைப்பது மேலும் சிறப்பான பலன்களை கொடுக்கும். சூரிய ஒளி படும்படியான இடங்களில் வைப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகள் உண்டாகும். தூய்மையின் அடையாளமாக இருக்கக்கூடிய இந்த ஸ்படிக தாமரையை வீட்டில் வைத்திருப்பதால், சுப காரிய தடைகள் நீங்கும். லட்சுமி கடாட்சம் பெருகும்.

- Advertisement -

இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களில் கிடைக்கப்பெறும் ஸ்படிக தாமரை படுக்கையறையில் வைக்கலாம். இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சண்டை, சச்சரவுகள் குறையும். கணவன், மனைவி உறவுகளில் ரொமான்ஸ் கூடும் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் நிற வண்ணம் கொண்ட படிக தாமரை செல்வங்களை ஈர்க்கும். அதிர்ஷ்டம் தரும் நல்ல அறிவையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. நீல வர்ண படிக தாமரை அறிவையும், ஆற்றலையும் பெருக்கும். எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் சக்தி உள்ளது.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி சனி பிரதோஷம் வழிபாடு

குழந்தைகள் இருக்கும் அறையில் இதனை வைப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமும், அறிவாற்றலும் மேம்படும். படிக்கக்கூடிய மேஜையின் மீது வைப்பதால், நினைவாற்றலும் பெருகும் என்று நம்பப்படுகிறது. தொழில் செய்யும் இடங்களிலும், அலுவலகங்களிலும் மேஜையின் மீது வைப்பதால் தொழில் வளம் சிறக்கும். இதனால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பணி செய்யும் ஊழியர்கள் தங்கள் மேஜையின் மீது எப்போதும் வைத்திருக்க நல்ல பலன்கள் உண்டாகும். சாதகமான மாற்றங்களையும், சுலபமான வழிமுறைகளையும் உண்டாக்கிக் கொடுக்கும்.

சற்று முன்