உங்கள் துறையில் தடையின்றி முன்னேற இதை தவறாமல் செய்து வாருங்கள். மலை போல் முன் நின்ற பிரச்சனை கூட பனி போல் உருகி ஒடி விடும். வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் சூட்சம வார்த்தை.

- Advertisement -

நாம் வாழும் வாழ்க்கை நல்லதாகவும் சிறப்பாகவும் அமைய வேண்டும் என்றால், முதலில் நம் எண்ணமும் செயலும், பேசும் வார்த்தைகளும் நல்ல முறையில் இருக்க வேண்டும். இதை தான் பெரியவர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறி வைத்தார்கள். உங்களுடைய எண்ணங்கள் நல்லபடியாக இருந்தால் எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், அதே போல் தான் சில வார்த்தைகளும். இந்த வார்த்தைகளை பேச பேச இந்த வார்த்தைகளின் சக்தியானது நம்முள் தோன்றி நாம் மேலும் மேலும் நல்ல நிலைமைக்கு செல்ல வழி வகுக்கும். அப்படி என்ன வார்த்தைகளை நாம் சொல்ல வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் அடிக்கடி பயன்ப்படுத்த வேண்டிய அந்த சூட்சமம் வார்த்தை நன்றி, வணக்கம் என்ற இவை இரண்டும் தான். ஒரு சில வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.  மந்திரங்கள் எப்படி திரும்ப திரும்ப சொல்லி அதற்கு சக்தி கொடுக்கிறோமோ, அதே போல தான் இந்த நன்றி, வணக்கம் போன்ற வார்த்தைககளும்.

- Advertisement -

அப்போதுயெல்லாம் இந்த வார்த்தைகளை தேங்க்ஸ், மார்னிங் என்று சொல்லாமல் வணக்கம், நன்றி என்று சொல்லும் பொழுது நம் இரண்டு கைகளும் கூப்பித் தான் சொல்லுவோம். இது தான் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த முறையும் கூட, நம்முடைய முன் காலத்தில் யாரையும் பார்த்து உடனே கைக் குலுக்கி பேசுவது என்பது கிடையாது. ஒருவருடன் கை கொடுக்கும் போது அவர்களின் எண்ண அதிர்வலைகள் கூட இடம் மாறும் என்று ஒரு தகவலை யாரும் உணர்வதில்லை. நீங்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று மனதளவில் நினைத்துக் கொண்டு நேரில் முகம் மலர்ந்து உங்களுடன் பேசும் ஒருவர் கை குலுக்கும் போது நிச்சயமாக அதன் தாக்கம் உங்களுக்கு வரும். இந்த காரணங்களாலும் தான் நம் முன்னோர்கள் இந்த கை குலுக்கும் பழக்கத்தை பின்பற்றமல் இந்த நன்றி, வணக்கம் என்ற வார்த்தைகளே பரிமாறிக் கொண்டார்கள். இந்த வார்த்தை முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நம்  முன்னேற்றத்திற்கான அனைத்து தடையும் கூட நீக்கி விடும்.

யாரேனும் நமக்கு ஒரு சிறிய உதவியை செய்தால் கூட, அது நம் உடன் இருப்பவர்களாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், கணவன் மனைவிக்குள்ளாக இருக்கட்டும் எந்த உறவாக இருந்தாலும் அவர்கள் செய்த காரியத்திற்கு ஒரு நன்றி சொல்லும் பொழுது அவர்கள் மனம் குளிரும். மனம் குளிர்ந்தாலே அது நமக்கு ஒரு ஆசீர்வாதம் தானே.

- Advertisement -

அதே போல் நம் எதிரி நம் முன் வந்து நின்றால் கூட, முகம் மலர்ந்து வாங்க வணக்கம் என்று ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்கள், இவர்களுக்கா நாம் தீங்கு நினைத்தோம் என்று அவர்களே ஒரு கணம் யோசிப்பார்கள். ஏனென்றால் இந்த வார்த்தைக்கான மகத்துவம் அப்படி.

வாழ்க்கையில் வெற்றி பெற்று நல்ல நிலைமையில் இருப்பவர்களை எல்லாம் நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் புரியும். அவர்கள் பேசும் போது  நிச்சயம் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி இருப்பார்கள். பயன்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். இது அவர்கள் முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒரு காரணமாக இருக்கும்.

இது வரை இந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை, இனி இதை பின்பற்ற தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் எட்டாத உயரத்திற்கு நிச்சயமாக செல்வீர்கள். உங்களுக்கு எவ்வளவு கீழே வேலை செய்பவராக இருந்தாலும் கூட, அவர்கள் ஒரு சின்ன உதவி செய்தாலும் அதற்கு நன்றியும், பிறரை பார்க்கும் போது அவர்கள் வணக்கமும் சொல்லி பாருங்கள், உங்களின் ஒவ்வொரு நாளும் நல்லதாக அமையும். வாழ்க்கையின் வெற்றிக்கான இந்த இரண்டு சூட்சம வார்த்தைகளை பயன்படுத்தி கடவுளின் ஆசியுடன் உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்த்தி செல்லுங்கள்.

- Advertisement -