முப்பெரும் தேவர்கள் என்று கூறக்கூடிய பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் தான் இந்த உலகத்தையே படைத்தார்கள் என்று கூறப்படுகிறது. நாம் வாழுகின்ற வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். நம்முடைய இறுதி காலத்தில் மீண்டும் பிறவாமை நிலை வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான ஒரு முன்னேற்ற நிலையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட
பெருமாளை வழிபாடு செய்வதற்கென்று சிறப்பு மிகுந்த நாட்கள், திதிகள் என்று இருக்கின்றன. அனுதினமும் பெருமாளின் விஷ்ணு சகஸ்ர நாமத்தை கேட்டாலோ அல்லது பாராயணம் செய்தாலோ நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. பீஷ்மர் மரணப்படுக்கையில் இருக்கும்போது கூறிய இந்த விஷ்ணு சகஸ்ர நாமத்தின் பலனால் தான் அவர் முக்தி நிலையை அடைந்தார் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்ததாக தான் பெருமாளின் திருநாமங்கள் திகழ்கின்றன. நம்மால் தினமும் 1000 திருநாமங்களை கூற இயலாது அல்லவா? அவற்றிலிருந்து ஒரே ஒரு திருநாமத்தை மட்டும் தினமும் கூறினாலே போதும் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்ற நிலையை நம்மால் அடைய முடியும்.
இந்த திருநாமத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் கூற வேண்டும். என்றைக்கு வேண்டுமானாலும் இந்த திருநாமத்தை நம் உச்சரிக்கலாம். எந்த நாளில் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். இரவு படுக்கச் செல்வதற்கும் முன் நம்முடைய வலது கையை உச்சம் தலையில் வைத்துக்கொண்டு பெருமாளின் இந்த ஒரு நாமத்தை 11 முறை கூற வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் படுத்து உறங்கலாம். இப்படி தினமும் நாம் கூறிக் கொண்டே வரும் பொழுது நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். அந்த முயற்சிகள் வெற்றி அடையும். அந்த வெற்றியின் காரணமாக நம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இந்த நாமம் பெருமாளின் பன்னிரண்டு நாமங்களில் ஒன்றாக திகழக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாமம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிறது என்பதால் இந்த நாமத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டாகிறது. எப்படி கிருஷ்ணர் தன்னுடைய வாய்க்குள் அனைத்து உலகத்தையும் தன்னுடைய தாயான யசோதைக்கு காட்டினாறோ அதே போல் தான் இந்த நாமத்தை நாம் கூறும் பொழுது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெருமாளின் அருளால் நம்மால் பெற முடியும்.
பெருமாளின் நாமம்
“ஓம் தாமோதராய நமஹ”
இதையும் படிக்கலாமே: எப்பொழுதும் பணம் கையில் இருக்க
ஒரே ஒரு திருநாமம் நம்முடைய வாழ்க்கையை மாற்றும். முழு நம்பிக்கையோடு, முழு மனதோடு பெருமாளின் இந்த நாமத்தை கூறி நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.