சொந்த வீடுகட்ட 1 ரூபாய் கூட உங்கள் கையில் இல்லையா? இந்த 2 நெய் தீபங்களை, 11 வாரம் ஏற்றினால் போதுமே! சொத்து வாங்க தேவையான பணம் உங்களைத் தேடி வரும்.

dheepam

கையில் பணத்தை வைத்துக் கொண்டு தான் வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்று சொன்னால் இன்று பல பேர் சொந்த வீட்டை கட்டியிருக்க முடியாது. காரணம் பூர்வீக சொத்து உள்ளவர்களால் மட்டும் தான், அந்த சொத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் நிலம் வாங்க முடியும். சொத்து வாங்க முடியும். தானாகவே உழைத்து சம்பாதித்து தான் சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கடன் வாங்கித்தான் வீட்டையோ நிலத்தையோ தனக்கு சொந்தமாக மாற்றிக் கொள்கிறார்கள். பின்பு அந்த கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகிறார்கள். இது இந்த கால சூழ்நிலையில் இயல்பாக நடந்து வரும் ஒரு விஷயம்.

new-house-graga

இன்றைய சூழ்நிலையில் உங்கள் கையில் வீடு கட்டுவதற்கோ நிலம் வாங்குவதற்கோ ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லை. ஆனால், அதற்கான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வீடு கட்டியே ஆகவேண்டும். நிலம் வாங்கி ஆக வேண்டும் என்ற மன உறுதி உங்களுக்கு இருந்தால், இறை நம்பிக்கை உள்ளவர்கள் முழுமையான பக்தியோடு, இந்த 1 தீபங்களை ஏற்ற வேண்டும். அது என்ன தீபம்? எந்த நேரத்தில், எந்த இறைவனுக்கு, எப்படி ஏற்றப்பட வேண்டும். என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பூமிகாரகன் மங்களகாரகன் செவ்வாய் பகவான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். இந்த செவ்வாய் பகவானை நினைத்து வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். உங்கள் வீட்டில் உங்களால் முடிந்த சாதத்தை நைவேத்யமாக தயாரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

chevvai bagwan

புதியதாக வாங்கப்பட்ட 2 மண் அகல் தீபங்கள். முடிந்தால் சுத்தமான பசு நெய், இரட்டை பஞ்சுத்திரி இவர்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாசனை நிறைந்த பூக்கள். பூஜைக்கு இது போதும். தற்சமயம் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கி விட்டது. செவ்வாய்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் நீங்கள் கோவிலுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு நவகிரக சந்நிதியில் செவ்வாய் கிரகத்திற்கு முன்னால் 2 நெய் தீபங்களை (காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்) ஏற்றி வைத்துவிட்டு, நீங்கள் கொண்டு சென்ற பிரசாதத்தை செவ்வாய் பகவானுக்கு முன்பாக வைத்து, நிவேதனம் செய்து அந்த பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மூன்று பக்தர்களுக்கு பிரசாதம் செய்தால் கூட போதும்.

- Advertisement -

சில இடங்களில் நவகிரக சன்னிதானத்திற்கு உள் பக்கம் தீபம் ஏற்ற விடமாட்டார்கள். இருப்பினும் பரவாயில்லை. வெளியில் எங்கு தீபம் ஏற்ற முடியுமோ அந்த இடத்தில் செவ்வாய் பகவானின் பெயரை உச்சரித்து, நீங்கள் சொத்து வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து, அதன் பின்பு தீபத்தை ஏற்றி வையுங்கள் தவறு கிடையாது.

deepam8

இதேபோல் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளவர்கள், இதே பரிகாரத்தை, இதேபோன்று உங்களுடைய வீட்டு பூஜை அறையில் செய்யலாம். செவ்வாய் பகவானை மனதார நினைத்து செய்யலாம், அவருடைய திருவுருவப்படம் கட்டாயம் நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. பிரசாதத்தை உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு கூட விநியோகம் செய்து கொள்ளுங்கள் தவறில்லை.

navagragam

இப்படியாக உங்களது வேண்டுதலை செவ்வாய்க்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் செவ்வாய் பகவானிடம் கோரிக்கையாக வைக்கும் போது நிச்சயம் எப்படி பட்டவர்களுக்கும் சொத்து வாங்கும் யோகம் வரும் என்பதுதான் நம்பிக்கை. சாஸ்திரமும் அதை தான் சொல்கிறது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு 11 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றி வரலாம். 11 வாரம் வரை தான் ஏற்ற வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. அதன் பின்பு நீங்கள் சொத்து வாங்கும் வரை செவ்வாய் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து தீபத்தை ஏற்றி வரும் பட்சத்தில் உங்களுடைய கனவு நிச்சயம் நினைவாகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
படுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா? தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ஒன்றுதான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.