உங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போதே, கோவிலுக்குள் நுழைந்த மன நிம்மதி கிடைக்கும்‌. வீட்டில் தினமும் இந்த இடத்தில் தீபம் ஏற்றி வந்தால்.

kitchen-lakshmi
- Advertisement -

வீடு என்பது கோவிலாக இருக்க வேண்டும். நம் வீட்டிற்குள் நுழையும்போதே மனநிம்மதி வரவேண்டும். வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும், நம்முடைய மனது நம் விட்டை தேடும். ‘எப்போதுதான் நம் வீட்டிற்கு போய் சேர போகின்றோம் என்று தெரியவில்லையே’ என்ற வீட்டினுடைய நினைப்பு எப்போதுமே நம் மனதில் இருக்கணும். அதுதான் சந்தோஷமான வீடாக இருக்க முடியும். ஆனால் சில பேர் வீட்டில் இருந்து எப்போது தப்பித்து வெளியே செல்லலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள். மன நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவும். சில பேர் வீடுகளில் கண்களை மூடி படுத்தால் கூட நிம்மதியாக தூக்கம்  வராது. வீட்டிற்குள் நுழைந்தால் இருக்கும் நிம்மதியும் போய்விடும்.

plant-in-kitchen

வீடு கோவிலாக இருந்தால் வீட்டில் இறைசக்தி குடி கொண்டுள்ளதாக அர்த்தம். வீடு நரகமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கம் இருப்பதாக அர்த்தம். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடித்து, வீட்டின் சூழ்நிலையை நல்லபடியாக மாற்ற ஒரு சுலபமான பரிகாரம் உங்களுக்காக இதோ.

- Advertisement -

உங்கள் வீட்டு சமையலறையில் தென்கிழக்கு மூலையில் அடுப்பை விட கொஞ்சம் உயரமான இடத்தில் சிறிய ஸ்டாண்ட் போல அமைத்துக் கொள்ளுங்கள். அடுப்புக்கு பக்கத்தில் தான் இந்த ஸ்டாண்ட் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அந்த அலமாரியின் மேலே ஒரு சிறிய விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் ஏற்றவேண்டும். காலையில் 6 மணிக்கு இந்த தீபத்தை குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வைத்து விடுங்கள். அரை மணி நேரம் போல தீபம் சுடர் விட்டு ஒளிரட்டும். அதன் பின்பு தீபத்தை மழை ஏற்றி விடலாம். மாலையில் 6 மணிக்கு பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது இந்த தீபத்தை அரை மணி நேரம் ஏற்றி வைத்து விட வேண்டும்.

deepam

சமையலறையில் இந்த தீபம் ஏற்றும் போது குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு ஏற்றவேண்டும். பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் பெண்கள் காலையில் குளிப்பது கிடையாது. பரவாயில்லை, நீங்கள் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கைகால் அலம்பிக்கொண்டு சமையலறையில் தாராளமாக இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

சமையலறையில் கேஸ் அடுப்பு இருக்கும். ஆகவே ஜாக்கிரதையாக சிலிண்டருக்கு அருகில் இந்த தீபத்தை ஏற்றாமல் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஏற்றிவைக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மண் அகல் விளக்கு, பித்தளையில் இருக்கக்கூடிய சிறிய விளக்கு எந்த விளக்கை பயன்படுத்தி வேண்டுமென்றாலும் தீபம் ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

vilakku-pray

சமையலறையில் குலதெய்வத்தை நினைத்து தென்கிழக்கு மூலையில் நீங்கள் ஏற்றக்கூடிய தீபம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்டி அடித்து, வீட்டில் இறைசக்தி குடிகொள்வதற்கு இந்த தீபம் துணைபுரியும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தீபத்தை ஏற்றிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றத்தை உணர முடியும். சண்டை சச்சரவு குறைந்து நிம்மதியான சூழ்நிலை நிலவும். உங்கள் வீடும் கோவிலாக மாறவேண்டும் என்றால் மேல் சொன்ன விஷயத்தை நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -