- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த விளக்கை ஏற்றி வைத்து பாருங்களேன். உங்களுடைய வீடும் புனித ஸ்தலத்திற்கு நிகரான மதிப்பை பெறும்.

இந்த விளக்கை ஏற்றி வைத்து பாருங்களேன். உங்களுடைய வீடும் புனித ஸ்தலத்திற்கு நிகரான மதிப்பை பெறும்.

- Advertisement -

காசி ராமேஸ்வரம் போன்ற புகழ்பெற்ற ஸ்தலங்களை தானே புனித ஸ்தலங்கள் என்று சொல்லுவார்கள். நம்முடைய வீட்டை எப்படி இத்தனை மதிப்புமிக்க இடமாக மாற்றுவது என்ற யோசனை எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கும். நாம் வாழக்கூடிய வீட்டையும் புனிதமான ஒரு கோவிலாக நிச்சயமாக மாற்ற முடியும். நம்முடைய வீடு புனிதம் அடைந்து விட்டால் நம்முடைய வாழ்வில் வரக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். வீட்டில் இருக்கக்கூடிய பீடை விலகும். தரித்திரம் விலகும். கண்ணுக்கு தெரியாத எந்த ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கமும் வீட்டில் பிரச்சனையை கொடுக்காது.

இந்த பரிகாரத்திற்காக நாம் பயன்படுத்த போகும் பொருள் மிக மிக சுலபமாக நமக்கு கிடைக்க கூடிய பொருள்தான். செலவு கூட செய்யத் தேவையில்லை. பசுமாட்டின் சாணம். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது சுலபமாக நிச்சயம் கிடைக்கும். நகர்ப்பங்களில் இருப்பவர்களுக்கு இந்த சாணம் கிடைப்பது கொஞ்சம் சிரமம். இருப்பினும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமங்களில் சொல்லி வைத்தால் சுலபமாக இந்த பசுஞ்சாணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

சிறிதளவு பசுஞ்சாணத்தை எடுத்து வந்து தண்ணீரில் கரைத்து உங்களுடைய வீட்டிற்குள் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய சதுர வடிவில் சாணத்தை மெழுகி, அந்த சாணம் காய்ந்ததும் அதன் மேலே பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்துக்கு மேலே இரண்டு மண் அகலங்கள் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விளக்கில் விளக்கெண்ணெய், நெய் இரண்டையும் சரிசமமாக ஊற்ற வேண்டும். ஒரு சிறிய பாட்டிலில் முதலில் விளக்கெண்ணெயையும் நெய்யையும் ஒன்றாக கலந்து வைத்துக் கூட அந்த இரண்டு விளக்குகளில் ஊற்றி விடலாம்.

கூடுமானவரை பசு நெய்யாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த விளக்கில் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். இந்த தீபச்சுடர் ஒளியில் உங்களுடைய வீடு புனிதம் அடையும். இது வரை நீங்கள் வசித்திருந்த வீட்டில் எந்த கஷ்டம் இருந்தாலும் சரி, அது நிவர்த்தி ஆகிவிடும். வீட்டில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கும். தடைப்பட்டிருந்த காரியங்கள் மீண்டும் பிறக்கும். சில பேருக்கு இந்த வீடு ராசி இல்லை என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படிப்பட்ட வீடு கூட ராசியாக மாறும்.

- Advertisement -

பெரும்பாலானோர் வீட்டில் இப்போது தரை டயல்சில் போடப்பட்டு உள்ளது. அதில் சாணம் மொழுக முடியாது என்றாலும் அல்லது வாடகை வீட்டில் தங்கி இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் செய்ய முடியாது என்றாலும் ஒரு சிறிய மரப் பலகையை வாங்கிக் கொள்ளுங்கள். மரத்தால் செய்யப்பட்ட மரப்பலகையின் மேல் கூட சாணத்தை மெழுகி கோலம் போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு கிழமையில் இந்த தீபத்தை ஏற்றலாம்.

தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் வைக்க வேண்டும். எந்த வேண்டுதலாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பத்திற்கு தேவையான நல்லதை அந்த இறைவனிடம் வரமாக கேளுங்கள். நிச்சயம் கூடிய சீக்கிரம் அது உங்களுக்கு கிடைத்துவிடும். மீண்டும் தீபம் ஏற்றும்போது பழைய சாணம் கோலத்தை துடைத்து விட்டு மீண்டும் புதியதாக சாணம் மெழுகி கோலம் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு பரிகாரத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் செய்து பலன் அடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்