“வீட்டை கட்டிப்பார்.., கல்யாணம் பண்ணிப்பார்..” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு ப்ராப்தம் வேண்டும். உங்களுக்கு என்று வர வேண்டியதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. வீடு கட்ட வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு வேண்டியதை கொடுக்கக்கூடிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க இருக்கிறோம்.
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆசை என்றால் அது வீடு கட்டுவதாகத் தான் இருக்கும். நமக்கென்று ஒரு வீடு அமைந்தால் எதை வேண்டுமானாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் வரும். இந்த வீடு யோகம் போலவே, வாகன யோகமும் ரொம்பவும் முக்கியமானது. முந்தைய காலங்களில் எளிமையாக ஒரு ஸ்கூட்டர் வாங்குவது கூட கனவாக இருந்தது. ஆனால் இப்பொழுது நமக்கென ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
வாகனம் வாங்குவதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இப்படி வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு இறையருளும் வேண்டும். இந்த இறையருள் இருந்தால், எண்ணியதை தடை இல்லாமல் உடனே நீங்கள் பெற்றுவிடலாம், ஆனால் இறையருள் இல்லை என்றால் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உங்களது கனவை நிறைவேற்றிக் கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
இந்த இடையூறுகளை சரி கட்ட, அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காவிட்டாலும் பரவாயில்லை முகம், கை, கால் கழுவி, வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பூஜை அறைக்கு சென்று ஒரு சுத்தமான அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வையுங்கள். மஞ்சள் மங்களகரத்தை உண்டாகக் கூடியது. ரெண்டு திரிகளை மஞ்சளில் தோய்த்து முன்னரே காய வைத்துக் கொள்ளுங்கள்.
காய வைத்த இந்த மஞ்சள் திரியை ரெண்டு எடுத்து ஒன்றாக இணைத்து திரித்துக் கொள்ளுங்கள். இந்தத் திரியை விளக்கில் போட்டு மனதார நீங்கள் எண்ணியதை வேண்டி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். “சீக்கிரம் வீடு கட்ட வேண்டும், சீக்கிரம் லோன் கிடைக்க வேண்டும், சீக்கிரம் கார் ஒன்றை புக் செய்ய வேண்டும், நினைத்த வாகனத்தை வாங்க வேண்டும் என்று உங்களுக்கு வேண்டியதை பிரார்த்தித்து தீபம் ஏற்றி உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரியுங்கள். கலியுகத்தில் மந்திரம் சொல்லி வேண்டுவதால் கிடைக்கக் கூடிய பலன்கள் அதிகம். அரைகுறையாக தெரிந்தாலும், இறைவனை நாமத்தை சொல்லி நீங்கள் வழிபடும் பொழுது அதற்குரிய பலன்கள் தனித்துவமானது.
இதையும் படிக்கலாமே:
21-9-2024 சனிக்கிழமை முன்னோர் வழிபாடு
வெறுமனே எதையாவது சிந்தித்துக் கொண்டு இறைவனை பிரார்த்திக்கக் கூடாது. முழு நம்பிக்கையுடன் வேண்டியது கிடைக்கும், அவர் நம்மை படைத்தவர் என்கிற பயமும், பக்தியும் கலந்த தூய்மையான மனதோடு பிரார்த்தித்து பின்னர் உங்களுடைய அன்றாட பணிகளை துவங்குங்கள். காலையிலேயே எழுந்து வேலை செய்வதால் உங்களுக்கு உடலில் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். மேலும் உங்களுடைய மூளை தெளிவாக வேலை செய்யும், இதனால் செய்யும் வேலையில் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். நன்கு கவனம் செலுத்தி உங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்து, முன்னேற்ற பாதையில் செல்வீர்கள், நினைத்ததை எளிதாக அடையவும் செய்வீர்கள்.