தினமும், இந்தப் பொருளை இறைவனுக்கு நிவேதனமாக வைத்தால், விரும்பிய வேலை உடனே கிடைக்கும். கூடவே கை நிறைய சம்பாத்தியமும் கிடைக்கும்.

poojai

கடந்த சில நாட்களாக நம்மில் நிறைய பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்துதான் வருகின்றது. காரணம் உலகமே கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பல இழப்புகளை சந்தித்தது. இந்த நோய்த் தொற்றினால் ஏற்பட்ட நஷ்டத்தில் நிறைய பேர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். தங்களுடைய வேலையை இழந்தார்கள். தங்களுடைய அன்றாட பிழைப்பு நடத்துவதற்கே, அதிகப்படியான கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்படியாக பல பிரச்சனைகளுக்கு காரணம் வருமானம் இல்லை. வேலை இல்லை என்பது தான்.

counting-cash

உங்களுடைய வேலை எதுவாக இருந்தாலும் அந்த வேலையில் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும், இப்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு அந்த வேலையை விடாமல் தக்கவைத்துக் கொள்வதுதான் நல்லது. புத்திசாலித்தனமும் கூட. உங்களுக்கு நேரம் சரியில்லாத காரணத்தினால், காலத்தின் சூழ்நிலையால் உங்களது வேலையை நீங்கள் இழந்து கஷ்டப்பட்டு வருபவர்களாக இருந்தால், உங்களுக்காக ஆன்மீக ரீதியான சுலபமாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. தினமும் அதிகாலை வேளையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அந்த நபரும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

poojai

வீட்டு பூஜை அறையில் காலையில் தீபம் ஏற்றி இறைவனுக்கு 3 முந்திரிப் பருப்புகளையும், 5 உலர் திராட்சைகளையும் நைவேத்தியமாக வைத்து, உங்கள் மகனுக்கோ, உங்கள் கணவருக்கு, உங்கள் மகளுக்கு இப்படியாக யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ, அந்த நபருக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வத்தினுடைய பெயரை உச்சரித்து கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ, அந்த நபர் இறைவனுக்கு வைத்த அந்த பிரசாதத்தில் இருந்து, ஒரு பருக்கையை தங்களுடைய வாயில் எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். குளித்து முடித்த பின்பு பூஜை முடித்த பின்பு இந்த பிரசாதத்தை சாப்பிட்டு விட்டுதான், உங்கள் பழக்கப்படி டீ காபி எது வேண்டுமென்றாலும் குடிக்க வேண்டும்.

munthiri

இந்த பரிகாரத்தோடு சேர்த்து கொஞ்சம் கோதுமை மாவில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை கலந்து பிசைந்து அடையாக தட்டி, பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். இந்த உணவை யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அந்த நபரின் கையாலேயே பசுமாட்டிற்கு கொண்டு சென்று தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Dry Grapes benefits in Tamil

அதாவது இந்த கோதுமை வெல்லம் சேர்த்த அடையை கொண்டுபோய் மாட்டு தொட்டியில் போட்டுவிட்டு வரக்கூடாது. முடிந்தால் வாழை இலையில் வைத்து, பசுமாட்டிற்கு உங்கள் கையாலேயே சாப்பிட வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு பாத்திரத்தில் கொண்டு போய் உங்கள் கையாலேயே எடுத்து பசு மாட்டிற்கு வாயில் வைத்தாலும் மேலும் சிறப்பானது.

இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் மனதுக்குப் பிடித்த வேலையோ, பிடிக்காத வேலையோ நம்முடைய வாழ்க்கையை ஓட்டுவதற்கு தேவையான வருமானத்தில் நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.