உங்கள் வீட்டில் இந்த வாசம் வீசும் வரை, கெட்ட சக்தி காற்றின் மூலமாக கூட வீட்டிற்குள் நுழைய முடியாது.

pachai-karpuram
- Advertisement -

ஒரு வீடு கோவிலாக மாற வேண்டுமென்றால், அந்த வீட்டில் கெட்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டிகள் இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லாத வீடே இல்லை. ஒரு வீடு என்று இருந்தால் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நம்முடைய வீட்டை கெடுதலில் இருந்து  முழுமையாக பாதுகாத்துக்கொள்ள சுலபமான ஒரு வழி முறையைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் ஏற்படக்கூடிய ஒரு நல்ல நறுமனத்தால், வீட்டில் இருக்கும் கெடுதல் வெளியே சென்றுவிடும். வெளியிலிருந்து எந்த ஒரு நெகட்டிவும் வீட்டிற்குள், காற்றின் மூலமாக கூட நுழைய முடியாது.

kettasathi-1

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள், நான்கு பொருட்கள் தான். வெட்டிவேர், சோம்பு, பச்சை கற்பூரம், மருதாணி விதைகள். நாட்டு மருந்து கடைகளில் மருதாணி விதைகள் என்று கேட்டால் கொடுப்பார்கள். காய்ந்த விதைகளை வாங்கி கொள்ளலாம். ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் கொஞ்சமாக சோம்பு, அதன்பின் வெட்டிவேர், பச்சை கற்பூரத்தை லேசாக நுணுக்கி போட்டுவிட வேண்டும். அதன் மேலே மருதாணி விதைகளை தூவி விடுங்கள். இதை அப்படியே உங்களுடைய வீட்டில் அலமாரிக்கு மேல் பக்கத்தில் யார் கையும் பட்டு கீழே விழுந்து உடையாமல் வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் தனித்தனியாக வைத்தாலும் நல்ல பலன் தான். இருப்பினும் இந்த பொருட்களெல்லாம் சேரும்போது இதிலிருந்து கலந்து வெளிவரக்கூடிய வாசத்திற்கு எந்த ஒரு கெட்டதும் நம் வீட்டிற்குள் நுழைய முடியாது. உங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்றாலும், இந்தப் பொருட்களையெல்லாம் ஒரு வெள்ளைத் துணியில் கட்டி உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

இதோடு சேர்த்து தினம்தோறும் உங்களுடைய வீட்டு நிலை வாசற் படியில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெயையும் பசு நெய்யையும் கலந்து ஊற்றி கொஞ்சமாக மருதாணி விதைகளை அந்த எண்ணெயில் போட்டு, திரி போட்டு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தினமும் 48 நாட்கள் இந்த தீபத்தை உங்கள் வீட்டு வாசலில் ஏற்றி வைத்தால், வீட்டிற்குள் நல்ல தேவதைகள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீட்டு வாசலில் இரண்டு பக்கத்திலும் இரண்டு தீபங்கள் ஏற்றலாம். பெண்கள் காலையில் வீட்டு வாசல் தெளித்து, கோலமிட்டு பின்பு நில வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, பூவைத்து அதன் பின்பு இந்த தீபத்தை ஏற்றி வைத்து நில வாசப்படி தொட்டு வணங்கி கொண்டால் வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு எந்த ஒரு குறையும் வராது.

vettiver

இது தவிர வாஸ்து குறைபாட்டால் உங்கள் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட, அதை குறைக்கக்கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் தூபம் போடும் போது அந்த தூபத்தில் கொஞ்சம் மருதாணி விதைகளையும் சேர்த்து தூபம் போட்டால், நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்தது, சண்டை சச்சரவுகள் குறைந்து, தேவையற்ற பிரச்சினைகள் வருவதும் குறையும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலனடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -