கரையான் புத்து, தேரை வீட்டிற்கு வருவது நல்லதா? கெட்டதா? நீங்களும் தெரிஞ்சுக்குங்க!

karaiyan-therai-suvadi

சில விஷயங்கள் வீட்டிற்கு வருவது எதிர்மறை ஆற்றல்களை உண்டு பண்ணும் என்பது நம்முடைய நம்பிக்கை. அவ்வளவு நாளாக இல்லாத ஒன்று திடீரென புதிதாக ஏற்படத் துவங்கும். அந்த வகையில் நம் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் சில உயிரினங்கள் நமக்கு எந்த மாதிரியான அறிகுறிகளை தெரிவித்து விட்டுச் செல்கிறது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

cockroach

ஒரு வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவைகள் எப்பொழுதும் நிரந்தரமாக குடி இருக்கும் உயிரினங்கள் ஆகும். எறும்புகள், கரப்பான் பூச்சிகள் போன்றவற்றை விரட்டுவதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தால் போதும். சுத்தம் இல்லாத வீடுகளில் தான் இது போன்ற கரப்பான் பூச்சிகள் தொந்தரவு இருக்கும். மாதம் ஒரு முறையாவது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துவிட வேண்டும்.

அடிக்கடி சுத்தம் செய்யும் பொழுது உங்களுக்கும் சுலபமாக இருக்கும். பூச்சி, புழுக்கள் தொந்தரவும் இருக்காது. நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே விட்டுவிட்டால் ஒரு நாள் இது போன்ற உயிர்கள் படை எடுக்கத் துவங்கும். அந்த வரிசையில் தேரை வருவது, கரையான் புற்று கட்டுவது போன்ற விஷயங்கள் நடைபெறும் பொழுது எதிர்மறை ஆற்றல்கள் உண்டாக துவங்கும்.

therai

எந்த ஒரு வீட்டில் தேரை நுழைகிறதோ! அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். தேரை வருவது நல்லது அல்ல. தவளை கூட பிரச்சினை இல்லை. ஆனால் தேரை வருவது அப்படி அல்ல. எளிதாக யாருடைய வீட்டிலும் தேரை நுழைந்து விடுவது இல்லை. காரணமே இல்லாமல் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் போன்ற விஷயங்கள் நடைபெறும். இவற்றை அறிவுறுத்தவே தேரை வந்து எச்சரிக்கிறது என்று கொள்ளலாம்.

அது போல மிகுந்த பழைய கட்டிடங்களில் கரையான் புத்து கட்டுவது இயல்பான ஒன்று தான் ஆனால் புதிதாக கட்டி இருக்கும் வீட்டில் அல்லது கட்டி சில வருடங்களே ஆன வீட்டில் கரையான் புத்து கட்டுவது என்பது அவ்வளவு நல்லதல்ல என்கிறது சகுன சாஸ்திரம். இம்மியளவு இருக்கும் கரையான் நிமிடங்களில் கால் கிலோ மண்ணை தோண்டி எடுத்து விடும். நீங்கள் என்னதான் அந்த மண்ணை சுரண்டி எடுத்து சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் கட்டிக் கொண்டே இருக்கும் இதனால் சுவர்கள் பாதிப்பு அடையும்.

karaiyan

ஒரு இடத்தில் மட்டும் அல்லாமல் வீடு முழுவதும் இதுபோன்ற கரையான் புற்றுகள் தோன்றிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் பணம் தண்ணீர் போல கரைந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தான் நீங்கள் சம்பாதித்தாலும் கரையான் போல காசும் கட கடவென கரைந்து கொண்டே போகும். எந்த அளவிற்கு உங்களுடைய வீட்டை சுற்றி கரையான் புற்றுகள் இருக்கிறதோ! அந்த அளவிற்கு செல்வ வளமும் குறையும் என்பதை அறிவுறுத்துகிறது. கரையான் புத்து உருவாவதை தடுக்க கல் உப்பை சிறிதளவு தண்ணீரில் கரைத்து புற்று கட்டி இருக்கும் இடங்களில் சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு மீண்டும் அந்த இடத்தில் கரையான் புற்று கட்டாது. அல்லது ஹார்டுவேர் கடைகளில் டெர்மினேட்டர் ஆயில் அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகித்து கரையான் புற்றுகளை முற்றிலுமாக நீக்கி விடலாம்.