எந்த ஒரு தீய சக்தியும் உங்கள் வீட்டை நெருங்காமல் இருக்க, இதை மட்டும் செய்தாலே போதும். 24 மணி நேரமும் உங்கள் வீட்டை பாதுகாக்க போக்கும் சக்தி வாய்ந்த வேல் பரிகாரம்.

pooja-room-vel

எதை செய்தால் நம்மை நாமே கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டிய பரிகார முறைகள் என்னென்ன, குறிப்பாக எந்த பொருளுக்கு எதிர்மறை ஆற்றலை விரட்டி அழிக்கக்கூடிய சக்தி அதிகமாக உண்டு என்பதை பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினம் தோறும் முருகப் பெருமானை வழிபட்டு, முருகப்பெருமானின் நாமங்களை உச்சரித்து, அந்த கந்த சஷ்டி கவசத்தை வீட்டில் ஒலிக்க செய்து வந்தாலே போதும். கண்ணுக்கு தெரியாத ஏவல் பில்லி சூனியம் நம்மை நெருங்காது. இது முதல் வழி.

vel

இதையும் தாண்டி உங்களுடைய கஷ்டங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வந்தால், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல்களின் மூலம் பிரச்சனை வந்தால் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை வீட்டில் இருந்தபடி நீங்களே செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்க்கு ஒரு சிறிய வேல் தேவைப்படும். உங்களுடைய வசதிக்கு ஏற்ப அந்த வேலை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், பித்தளை, செம்பு, எந்த உலோகத்தில் வாங்கிக் கொண்டாலும் சரி தான்.

வாங்கி வந்த புதிய வேலுக்கு உங்கள் வீட்டில் பால் அபிஷேகம் கட்டாயம் செய்ய வேண்டும். அதன் பின்பு சுத்தமான தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, ஒரு சிறிய சொம்பில் விபூதி நிரப்பி அந்த விபூதியில் இந்த வேலை சொருகி வைக்க வேண்டும். வேலுக்கு சந்தன குங்கும பொட்டும் வாசனை மிகுந்த பூக்களையும் வைத்து விடுங்கள். முதல் நாள் வேலை பிரதிஷ்டை செய்யும்போது மட்டும் அபிஷேகம் செய்தால் போதும்.

Lord Murugan Vel

தினமும் காலை நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் இந்த வேலுக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முருகப் பெருமானை வேண்டி கந்த சஷ்டி கவசத்தை உங்களது வாயால் புத்தகத்தைப் பார்த்து படிக்க வேண்டும். தொடர்ந்து 27 நாட்கள் இந்த பூஜையை விடாமல் செய்துவர வேண்டும். 27 நாட்களும் உங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கும் வேலுக்கு முன்பாக அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை படித்து வேலுக்கு சக்தியூட்ட வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கவிட்டு எல்லாம் இந்த பூஜையை செய்யக்கூடாது. நீங்கள்தான் வாய்விட்டு படிக்க வேண்டும்.

27 நாட்கள் முடிந்ததும் பூஜை செய்த அந்த வேலையும் அந்த சொம்பில் இருக்கும் விபூதியையும் கொஞ்சமாக எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், உயரமான இடத்தில் தொங்க விட்டு விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை எதிர்மறை ஆற்றல்களில் இருந்து அந்த வேல் 24 மணி நேரமும் பாதுகாக்கும்.

vel-poojai

இந்த வேலை எடுத்து மாற்ற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. அந்த வேல் உங்களுடைய வீட்டில் அப்படியே இருக்கட்டும். உங்கள் வீடு எந்த ஒரு கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் சுபிட்சமாக இருக்க இது ஒரு சுலபமான வழிபாட்டுமுறை. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொண்டோம்.