வீட்டில் இருக்கும் கஷ்டம் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே, வீட்டை விட்டு வெளியே ஓடி விடும். இந்த தண்ணீரை மட்டும் வீட்டில் தெளித்தால்!

nilavasal

எப்போதுமே நமக்கு, நல்லது வந்த வழியை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த நல்லதை அதே வழியில் நாம் மீண்டும் மீண்டும் வரவேற்க வேண்டும். நம்மிடம் இருக்கும் கெடுதல் நம்மை விட்டு ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு வழியில் வெளியே சென்று விட்டதாக உணர்ந்தால், அதை நினைத்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அது வெளியே சென்ற வழியை ஆராய்ச்சி செய்யக் கூடாது. ஏனென்றால் கெட்ட காலம் முடிந்ததும் கெடுதல் என்றுமே நம்மிடம் தங்காது. நடந்த கெடுதலையே நினைத்துக் கொண்டிருந்தால், அது மீண்டும் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளவும் நிறைய வாய்ப்பு உள்ளது. ஆக நமக்கு நடந்த கெட்டதை என்றைக்குமே சிந்தித்துக் கொண்டு, அந்த கெடுதல் நமக்கு எப்படி நடந்தது என்ற படி எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கக் கூடாது.

nilai-vasal

உங்களை விட்டு கெட்டது விலகிச் சென்றதால் அந்த ஆண்டவனை நினைத்து தலைக்கு குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து, நல்ல வழியை தேடி சென்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான். சரி, என்று இந்த பதிவின் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கெடுதலை, நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை எதிர்மறையான ஆற்றல்களை, எப்படி வெளியே அனுப்ப போகின்றோம் என்பதை பற்றிதான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய உடலில் இருக்கும் நஞ்சினை வெளியேற்றக் கூடிய சக்தி இஞ்சிக்கு உண்டு. இஞ்சி காய்ந்த பிறகு தான் சுக்காக மாறுகின்றது. இதை நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். உங்களால் இந்த இரண்டு பொருளில் எதை பயன்படுத்த முடியுமோ அதை, இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Ginger - Inji

நம் உடலில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை போக்கக்கூடிய மருத்துவம் கொண்ட இந்த இஞ்சி சுக்கு, இரண்டு பொருட்களிலும், நம்முடைய வீட்டில் இருக்கும் நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும் தன்மையும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் வீட்டில், வாசலை கூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளிக்கும் போது, அந்த தண்ணீரில் 1/2 ஸ்பூன் அளவு சுக்கு பொடியை கலந்து தெளிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்தால் வீட்டிற்குள் தரித்திரம் நுழையாது. இதேபோல் உங்களுடைய வீட்டை துடைக்கும்போது அல்லது கழுவி விடும் போது, அந்த தண்ணீரில் சிறிதளவு சுக்கு தூளை சேர்த்துக் கொள்ளலாம். சுக்குத்தூள் சேர்த்து தண்ணீரிரை வைத்து, வீட்டின் மூலை முடுக்குகளில் சுத்தம் செய்தால், நம் வீட்டில் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் அழிந்துவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

sukku

முடிந்தவர்கள் சுக்குத் தூளை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்துங்கள். முடிந்தவர்கள் இஞ்சியை கொஞ்சமாக நசுக்கி தண்ணீரில் போட்டு 1/2 அரை மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீரில் ஊறிய இஞ்சி திப்பியை தூக்கி குப்பையில் போட்டு விடலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

vasal-lakshmi

தினம்தோறும் வாசல் தெளிக்கும் தண்ணீரில் இஞ்சி அல்லது சுக்கு தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு முறையும் வீடு துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் இஞ்சி அல்லது சுக்கு தூளை சேர்த்துக் கொள்ளலாம். ஆன்மீக ரீதியாகவும் இது நமக்கு பல நன்மைகளை கொடுக்கும். ஆரோக்கிய ரீதியாகவும் பல நன்மைகளை கொடுக்க வல்லது இந்த பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும். நீங்களே எதிர்பாராத பல நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.