உங்களுடைய வீட்டில் இப்படி பூஜை செய்தால், அந்த இறைவனே மனம் மகிழ்ந்து நேரில் வந்து உடனே வரத்தை அள்ளிக் கொடுத்து விடுவார்.

poojai

சுவாமிக்கு செய்யும் வழிபாட்டினை ‘பூஜை’ என்று ஒரே ஒரு வார்த்தையால் சொல்லி முடித்துவிட முடியாது. இந்த பூஜையில் பல வகை உண்டு. பூஜை என்ற வார்த்தைக்குள் பலவகை சிறப்புகள் அடங்கியுள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது பாலகர்கள் செய்யக்கூடிய பூஜை, கணவன்-மனைவி தம்பதியாக சேர்ந்து செய்யக்கூடிய பூஜை, வயது முதிர்ந்தவர்கள் செய்யக்கூடிய பூஜை, சன்னியாசிகள் செய்யக்கூடிய பூஜை. இதற்கெல்லாம் என்ன பலன் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். ஒருவருடைய வீட்டில் இந்த முறைப்படி பூஜை புனஸ்காரங்களை தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வீட்டில் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.

poojai arai

பொதுவாகவே குழந்தைகள், இறைவனிடம் கேட்கும் வேண்டுதலுக்கு சக்தி அதிகம் என்று சொல்லுவார்கள். கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்டவர்கள் பாலகர்கள். அதாவது 12 வயதிற்குள் இருக்கக்கூடிய ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அவர்களது கையால் வாரம் ஒரு முறையாவது நம்முடைய வீட்டில் இருக்கக் கூடிய பூஜை அறையில் உள்ள சுவாமியின் திருவுருவப் படத்திற்கு பூஜை செய்யும் பழக்கத்தை நாம் கொண்டு வர வேண்டும். இப்படி செய்து வந்தால் இறைவன் மனம் மகிழ்ந்து நம் வீட்டிற்கு வந்துவிடுவார்.

அடுத்தபடியாக ஒருவருடைய வீட்டில் சந்தோஷம் நிலைத்து இருக்க வேண்டும் என்றால், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தம்பதியர்கள் செய்யும் பூஜைக்கு அந்த இறைவனே மனம் மயங்கி விடுவார் என்று சொன்னால் அது மிகையாகாது. தம்பதியர்களாக இறைவனிடம் வேண்டி தினமும் நமஸ்காரம் செய்து கொண்டாலே போதும். உங்களுடைய வீடு செல்வ செழிப்போடு சுபிட்சம் அடைந்துவிடும். நீங்கள் கேட்கும் வரத்தை அந்த இறைவனால் மறுக்கவே முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பூஜை தம்பதியர்கள் செய்யக்கூடிய பூஜை.

poojai1

அடுத்தபடியாக வீட்டில் முதியவர்கள் இருந்தால் இப்போதெல்லாம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக உள்ளது. ஆனால் வீட்டில் இருக்கும் முதியவர்கள் தங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இறைவனை நினைத்து காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஜபம் செய்து வந்தால், அந்த வீட்டிற்கு வரக் கூடிய தீராத கஷ்டங்கள், துயரங்கள் தீரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மாறாக எந்த வீட்டில் முதியவர்கள் தங்களுடைய வாரிசுகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை திட்டிக் கொண்டு, சாபம் கொடுத்து கொண்டே இருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் நிச்சயமாக கஷ்டம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் வயது முதிர்ந்தவர்கள் ஆக இருந்தால் உங்களுடைய குடும்பத்திற்கு சாபம் கொடுப்பதை இன்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். (எல்லா முதியவர்களும் இப்படி கிடையாது சில பேர்.) இதேபோல் இளைய தலை முறையினர்கள், வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைமுறையோடு அவர்களைப் புரிந்து கொண்டு நடத்த வேண்டியது அவர்களுடைய கடமை.

praying-god1

இறுதியாக சொல்லப்படுவது சன்யாச பூஜை. மேற்சொன்ன பூஜை புனஸ் காரங்களை விட, சன்னியாசம் இருந்து பூஜை செய்பவர்களுடைய வேண்டுதல் அதிசக்திவாய்ந்த என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லோராலும் சன்னியாசம் எடுத்து இறைவனிடமிருந்து வரத்தினை பெற்றுவிட முடியாது. இந்த சன்னியாச பூஜை என்பது தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்தவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

praying-women

இவ்வாறாக வீட்டிலிருக்கும் ஒவ்வொருவருமே இறைவனிடம் மனமுருகி வேண்டுதலை வைக்கும் போது அந்த இறைவன் நிச்சயம் மனம் இறங்குவார். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு இறங்கி வந்து உங்களைக்காண வரத்தை அள்ளிக் கொடுப்பார். பிறகு உங்களுடைய வீட்டில் கெடுதல் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. நல்லது என்ற ஒன்று தள்ளி போவதற்கு இடமில்லாமல் போய்விடும். வீடு சுபிட்சம் அடையும் என்ற நம்பிக்கையை இறைவனிடம் மொத்தமாக வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.