உங்களுடைய வீடு பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளதா? கஷ்டத்தைத் தரும் பிரச்சனைகளை, கஷ்டப்படாமல் வீட்டைவிட்டு அனுப்ப சக்தி வாய்ந்த, சுலபமான பரிகாரம்.

navagraha

வீடு என்று இருந்தால் அதில் கட்டாயம் பிரச்சனைகள், கஷ்டங்கள், துக்கங்கள் இவை அனைத்தும் இருக்கத்தான் செய்யும். கவலைகள் உள்ளது, கஷ்டங்கள் உள்ளது, என்பதற்காக நம்முடைய சந்தோஷத்தை எந்த நாளிலும் எந்த சூழ்நிலையிலும் இழந்து விடக்கூடாது. நமக்கு இருக்கின்ற துயரங்களிலிருந்து துன்பங்களிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதை சிந்தித்து, செயல்பட்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டியது தான். இதுதான் வாழ்க்கையின் இயல்பு. இதை புரிந்த மனிதர்கள் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பிரச்சினைகளும் கஷ்டங்களும் தனக்கு மட்டும் தான் உள்ளது’ என்று நினைத்து அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படும் மனிதர்களின் வாழ்க்கை கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கின்றது.

navagragam

சரி, என்னதான் ஜாதகம் பார்த்து, என்னதான் வாஸ்து பார்த்து நம்முடைய வாழ்க்கை சூழலை அமைத்துக் கொண்டாலும், நமக்கே தெரியாமல் ஏதோ ஒரு குறை, ஏதோ ஒரு தவறின் மூலம் நமக்கான பிரச்சனை, நம்மை தொடரத்தான் செய்கின்றது. நம்மை சூழ்ந்திருக்கும் பிரச்சனையிலிருந்து வெளிவர, ஆன்மீக ரீதியான சுலபமான பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக இருப்பது இந்த நவகிரகங்கள் தான். நவக்கிரகங்களை சாந்தி செய்வதற்கு நவகிரகங்களுக்கு உரியதான நவதானியத்ற்க்கே முதலிடம் உண்டு. இந்த நவதானியத்தை ஒரு வீட்டில் எப்போதுமே வைத்துக்கொள்வது அந்த வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும்.

navadhaniyam

இந்த நவதானியத்தை நம்முடைய வீட்டில் எப்படி வைத்தால், வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வீட்டில் சந்தோஷம் படிப்படியாக உயரும். உங்களுடைய வீட்டில் தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட கொட்டாங்குச்சிகளை வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளுங்கள். அதில் கீழே கண் பகுதியில் ஓட்டை இல்லாத கொட்டாங்குச்சிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மூன்று கொட்டாங்குச்சியை எடுத்துக்கொண்டு, அதன் உள்ளே ஒவ்வொரு கைப்பிடி அளவு நவதானியத்தை போட்டு கொள்ள வேண்டும். கொட்டாங்குச்சியை தரையில் வைத்தால் நிற்காது. கீழே விழுந்துவிடும். கொட்டாங்குச்சி கீழே விழாமல் இருக்க, அதன் கீழே ஒரு சிறிய கிண்ணம் அல்லது கலவடயை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

kottaguchi

நவதானியங்கள் நிரப்பப்பட்ட கொட்டாங்குச்சியில் மேலே 3 கிராம்புகளை வைத்து இதை திறந்தபடி அப்படியே உங்கள் வீட்டு வரவேற்பறையில், கிழக்கு பக்கமாக வைத்துவிடுங்கள். உங்கள் வீடு கிழக்கு திசையில் அலமாரிகள் இருந்தாலும் அதன் மேலே இதை யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்து விட்டாலே போதும். வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷங்கள், கிரக கோளாறுகள், ஜாதக கட்டத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.

krambu

இந்த நவதானியங்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தானியத்தை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிட்டு மீண்டும் புதியதாக நவதானியத்தை அதே கொட்டாங்குச்சியில் வைத்துக்கொள்ளலாம். இது ஒரு சுலபமான பரிகார முறைதான். இருப்பினும் வீட்டில் இருக்கும் தீர்க்கமுடியாத பல பிரச்சனைகளுக்கு கூட, கூடிய சீக்கிரமே சுலபமான தீர்வு கொடுக்கும் சக்தி இந்த பரிகாரத்திற்க்கு உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.