வீட்டில் திடீர் திடீரென மர்மமான வாசம் வருகிறதா? துர்நாற்றம் வீசினாலும், நல்ல மணம் வீசினாலும் இதெல்லாம் கூட அர்த்தமாக இருக்குமாம் தெரியுமா?

thirusti-smell
- Advertisement -

வீட்டில் திடீர் திடீரென மர்மமான முறையில் சில நேரங்களில் வாசம் வீசுவதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? எதுவுமே இருக்காது ஆனால் ஒரு விதமான வாசம் நம்மை சுற்றி கப்பென வீசத் தொடங்கும். கொஞ்ச நேரம் தான் அந்த வாசனை நீடிக்கும், பிறகு போய்விடும். காரணமே இல்லாமல் இப்படி வீட்டில் துர்நாற்றம் வீசவும், அல்லது நல்லதொரு தெய்வீக மணம் வீசவும் என்ன காரணம்? என்பதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

dead-death

வீட்டில் திடீர் திடீரென சில நேரங்களில் மர்மமான முறையில் கருவாடு நாற்றம் வீசுவது அல்லது பிண நாற்றம், ரத்த வாடை அடிப்பது போன்ற விஷயங்கள் நடைபெற்றால் அந்த இல்லத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்துள்ளன என்பதை குறிக்கிறது. புதிதாக வீடு கட்டி குடியேறுபவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அந்த வீட்டை சுற்றிலும் எதிர்மறை ஆற்றல் உள்ளன என்பதை குறிக்கிறது.

- Advertisement -

ஒரு சில விஷயங்களை முற்றிலுமாக மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடவும் முடியாது. அந்த வகையில் இத்தகைய மர்மமான வாசனை எங்கிருந்து வருகிறது? என்று உங்களால் கூற முடியுமா? அதே போல சில நேரங்களில் நல்ல மணங்களும் வீசத் தொடங்கும். ஊதுபத்தி வாசம், கற்பூர வாசம், சாம்ப்ராணி வாசம் போன்ற நல்ல நறுமணங்களும் சில நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் திடீரென நமக்கு உணர தோன்றும்.

sambrani

இது போல நல்ல ஒரு தெய்வீக மணம் வீசினால் அங்கு இறைவனுடைய நடமாட்டம் இருப்பதை நாம் உணரலாம். தெய்வீக சக்தி நிறைந்துள்ள இல்லத்தில் கட்டாயம் இது போல் நல்லதொரு வாசம் திடீரென வீசும். நம்மையும் அறியாமல் நாம் செய்த புண்ணியத்தின் பலனாக இத்தகைய தெய்வீக மணம் நம்முடைய இல்லத்தில் வீசக்கூடும்.

- Advertisement -

சில சமயங்களில் சிலருடைய வீட்டில் கூட சுவாமி படங்களில் இருந்து விபூதி வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வீட்டிற்குள் நுழைந்ததும் சாம்பிராணி மணம் வீசுவது, சந்தன மணம் வீசுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அங்கு தெய்வீக நடமாட்டம் இருப்பதை குறிக்கிறது. உங்களிடம் சாம்பிராணியே இருக்காது ஆனால் திடீரென சாம்பிராணி மணம் வீசும். மல்லிகை பூ மணம் வீசுவதை கூட சிலர் உணர்ந்திருப்பார்கள். பூவே இல்லாத வீட்டில் திடீரென மல்லிகைப் பூ மணம் எங்கிருந்து வீசும்? அதுவும் மிக மிக அருகில் நமக்கு வீசுவதை உணரும் பொழுது உடல் சிலிர்க்கும். இத்தகைய விஷயங்கள் பலரும் அனுபவ பூர்வமாக கண்டுள்ளனர்.

thirusti-things

வீடு, மனை போன்ற அசையாத சொத்துக்களை வாங்கும் பொழுது கண்டிப்பாக கவனமுடனிருப்பது நல்லது. ஒரு நிலம் வாங்கும் பொழுது அந்நிலத்தில் பிரேதம் ஏதாவது புதைக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் இது போன்ற கெட்ட வாசனை வீச வாய்ப்புகள் உண்டு. முந்தைய காலத்தில் எல்லாம் தலைச்சம் பிள்ளை இறந்தால் வீட்டில் தான் புதைப்பார்கள். அக்குழந்தையின் ஜீவன் முற்றிலும் பிரியும் முன்னரே புதைத்து இருந்தால் அந்த வீட்டில் இது போல நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே நிலம், வீடு வாங்கும் பொழுது நாம் கவனித்து ஆராய்ந்து வாங்கினால் பிற்காலத்தில் நமக்கு எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படுவதை தவிர்க்கலாம். இது போல் இருக்கும் வீடுகளில் கட்டாயம் எலுமிச்சை பழத்துடன் ஒரு துண்டு கறி மற்றும் பச்சை மிளகாய்களை கட்டி தொங்க விடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -