இந்த பொருட்கள் எல்லாம் உங்களுடைய வீட்டில் இருந்தால் உடனடியாக தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள். வீட்டில் பண கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்.

cash2
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக எவ்வளவோ பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் பின்பற்றி வருவார்கள். ஆனால் சில்லறை தனமாக சில விஷயங்களை செய்து விட்டு, தரித்திரத்தை அவர்களே தேடிக்கொள்வார்கள். இப்படி சொல்வது தவறுதான். ஆனால் வேறு வழி கிடையாது. வீட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். பின் சொல்லக்கூடிய விஷயங்களை செய்யும் போது உங்களுடைய வீட்டில் நிச்சயமாக பணக்கஷ்டம் வரும். பணக்கஷ்டத்தை கொடுக்கக் கூடிய அந்த சின்ன சின்ன தவறுகள் என்னென்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சில பேர் பழைய செருப்பு கிழிந்து விட்டது என்று சொல்லி புதியதாக செருப்பை வாங்குவார்கள். ஆனால் பழைய செருப்பை தூக்கி குப்பையில் போட்ட மாட்டார்கள். என்றாவது உதவும் என்று பழைய செருப்பை ஒரு அட்டைப் பட்டியில் போட்டு வீட்டில் வைத்திருப்பார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. புது செருப்பு வாங்கியவுடன் பழைய செருப்பை உடனடியாக தூக்கி குப்பையில் போட வேண்டும். சிலபேர் புது செருப்பை வாங்கி அளவு சரியில்லை கால் கடிக்கிறது என்று இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்திவிட்டு, வருட கணக்கில் பயன்படுத்தாமல் அதை செருப்பு ஸ்டாண்டில் வைத்திருப்பார்கள். இதுவும் தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய செயல் தான். ஒருவர் ஒருமுறை பயன்படுத்திய சிறப்பாகவே இருந்தாலும் அதை மற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அடுத்தபடியாக காஸ்ட்லியான வாங்கிய ஷோபா, டேபிள், டைனிங் டேபிள், சேர், என்று நம்முடைய வீட்டில் நிறைய பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களில் ஏதோ ஒரு சின்ன உடைசல் வந்திருக்கும். அந்த பர்னிச்சரில் அமர்ந்து எழுந்தாலே கீச்சு கீச்சு சத்தம் கேட்கும். இப்படிப்பட்ட உடைந்த பர்னிச்சர் நம் வீட்டில் இருக்கக் கூடாது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். சில பேர் வீட்டில் கட்டிலில் கூட இப்படி சத்தம் வரும். அது என்ன என்று பார்த்து உடனடியாக சரி செய்யுங்கள்.

துடைப்பம், ஒட்டடைக்குச்சி, மாப், பாத்ரூம் கழுவக்கூடிய பிரஷ், இவை எல்லாமே பழையதாகிவிட்டால் உடனடியாக புதுசு வாங்கி விடுவார்கள். ஆனால், உடனடியாக பழைய பொருளை தூக்கி குப்பையில் போடவே மாட்டார்கள். இந்த பழைய துடைப்பத்தை வெளியே கூட்ட பயன்படுத்தலாம். மொட்டை மாடி கூட்ட பயன்படுத்தலாம் என்று எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அது ரொம்ப ரொம்ப தவறு. தேய்ந்து போன பழைய துடைப்பம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக வீட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள்.

- Advertisement -

கிஃப்ட் வந்த அட்டைப்பெட்டி, பார்சல் வந்த அட்டைப்பெட்டி, இப்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் நிறைய பொருட்களை வாங்கி வாங்கி அதை பேக் செய்து வந்த கவர், அட்டைப்பெட்டி, என்று வீட்டின் ஒரு மூலையில் பெரிய குப்பை கிடங்கே கிடக்கும். கேட்டால் வேறு ஏதாவது பேக் செய்வதற்கு அது பயன்படும் என்று சொல்லுவார்கள். இப்படி தேவையற்ற பொருட்களை வீட்டில் குவித்து வைக்க கூடாது. அதையும் உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்.

தீர்ந்து போன ஷாம்பு டப்பா, ஹேர்பிக் டப்பா, லைசால் டப்பா, ஹார்லிக்ஸ் டப்பா, இப்படி தீர்ந்து போன எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் ஒரு அட்டை பெட்டியல் போட்டு வீட்டு வாசலிலோ அல்லது படிக்கட்டுக்கு கீழேயோ ஒரு காய்லாங்கடை ஜாமானம் அவ்வளவு சேர்ந்திருக்கும். கேட்டால் பழைய பொருட்கள் எடுப்பவர்களிடம் போட்டு அதை காசு வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதையாவது உடனடியாக போடுவார்களா. இல்லை. குப்பை சேர்ந்து சேர்ந்து அவ்வளவு இருக்கும். அதை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். இவை அனைத்துமே எதிர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய பொருட்கள் தான்.

இது தவிர உடைந்த கண்ணாடி, உடைந்த பீங்கான் பொம்மை, உடைந்த பிளாஸ்டிக் நாற்காலி, விரிசல் விட்ட ஜன்னல் கண்ணாடி, என்று எது பழுதடைந்து இருந்தாலும் உடனடியாக நீங்கள் மாற்றி விட வேண்டும். நான் வாடகை வீட்டில் இருக்கின்றேன் என்னுடைய ஜன்னல் கண்ணாடி உடைந்திருக்கிறது என்றாலும் அதை நீங்கள் மாற்றித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அதனுடைய எதிர்மறை ஆற்றல் உங்களுக்கு தான் கெடுதலை கொடுக்கும். எனவே சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சோம்பேறித்தனம் படாமல் எல்லாவற்றையும் சரிவர செய்துவிட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு வீண் விரையமும், பண கஷ்டம் வருவது குறையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -