எந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்

astrology

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அவர்கள் வாசிக்க ஒரு வீடு இருப்பது அவசியம் அது வாடகை வீடாகவோ அல்லது சொந்த வீடாகவோ இருக்கலாம். இங்கு 12 ராசியினருக்கும் அவர்கள் குடியிருக்கும் வீடுகளின் எத்திசையை நோக்கி இருந்தால் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதையும் அத்துடன் சில குறிப்புகளும் கூறப்பட்டுள்ளன. அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

Mesham Rasiமேஷம் ராசியினர் தங்களின் சொந்த வீட்டின் தலை வாயில் படியை வடதிசையை அமைத்துக்கொள்வது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட வட திசை பார்த்த வாறு வாயில் இருக்கும் இல்லத்தில் குடியிருந்தால் கூடிய விரைவில் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் ஏற்படும்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசியினர் தாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளின் வாயிலும், தங்கள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டின் தலை வாயில் பொடியையும் தென் திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்வது பல நன்மைகளை ரிஷப ராசியினருக்கு ஏற்படுத்தும். இத்தகைய வீடுகளில் இரண்டு வாயிற்படிகள் இருந்தாலும் சிறப்பு.

மிதுனம்:

- Advertisement -

midhunamமிதுனம் ராசியினருக்கு மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் தலைவாயில்களை கொண்ட வீடுகள் யோகத்தை கொடுக்கும். இந்த மேற்கு திசைக்கு அதிபதி வருண பகவான். எனவே மிதுனம் ராசியினர் இத்தகைய வீடுகளில் குடியிருக்கும் போது வீட்டின் மேற்கு பகுதியில் குறைகள் ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்வதால் வருண பகவானின் பூரண ஆசி கிட்டும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசி காரர்களுக்கு வீடுகளின் தலை வாயில்கள் எந்த திசையில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் கடக ராசியினருக்கு மிகுந்த நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் திசை கிழக்கு திசை ஆகும். இது சூரியன் உதிக்கும் திசை என்பதால், அவரின் அருளாற்றல் முழுமையாக இத்தகைய வீடுகளில் கடக ராசியினர் பெறலாம்.

சிம்மம்:

simmamசிம்ம ராசிக் காரர்களுக்கு நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் திசையாக வட திசையை கூறலாம். எனவே வட திசை நோக்கிய தலை வாயில்களை அமைப்பதும், அத்தகைய வாயில்கள் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும் சிம்ம ராசியினருக்கு அவரை சார்ந்தவர்களுக்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி:

Kanni Rasiகன்னி ராசியினர் எத்திசை வீடுகளில் குடியிருந்தாலும் பாதகமொன்றுமில்லை. ஆனாலும் இந்த ராசியினரின் வீடுகள் மக்கள் அதிகம் பயணிக்கும் சாலைகளின் அருகே அமைவது இவர்களுக்கு யோகத்தை தரும். மேலும் இவர்கள் தங்கள் வீட்டின் மேற்கு பகுதியில் இரண்டு தென்னை மரங்களை நட்டு வளர்ப்பது நன்மைகள் பயக்கும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசியினரும் தெற்கு திசை பார்த்தவாறு இருக்கும் தலை வாயில்களை கொண்ட வீடுகளில் வசிப்பது இவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இவர்கள் குடியிருக்கும் வீடுகளின் வட கிழக்கு பகுதியில் நீர் ஓட்டம் இருந்தால், அது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

விருச்சிகம்:

virichigamவிருச்சிகம் ராசியினர் கிழக்கு திசை பார்த்த வீடுகளில் இருப்பது நீண்ட ஆயுளையும், அதிர்ஷ்டத்தையும் இவர்களுக்கு கொடுக்கும். அதோடு இந்த ராசியினர் வசிக்கும் வீடுகளின் கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு கோவில் அமைந்திருந்தால் அது இவர்களுக்கு மிகுந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

தனுசு:

Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்கள் வட திசையை நோக்கியவாறு வீட்டின் தலை வாயில்கள் இருக்கும் வீடுகளில் வாசிப்பதும், தங்களின் சொந்த வீடுகளின் வாயில்களை அத்திசையை நோக்கி அமைத்துக்கொள்வதும் சிறப்பான பல நன்மைகளை இவர்களுக்கு ஏற்படுத்தும். இவர்கள் சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கி வர வேண்டும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

Magaram rasiமகரம் ராசியினர் தென் திசையை நோக்கி வாயில்கள் இருக்கும் வீடுகளில் குடியிருப்பது இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பல விதமான நன்மைகளை ஏற்படுத்தும். இத்தகைய வீடுகளில் தலைவாயில் கதவுகள் ஒற்றை கதவுகளாக இல்லாமல் இரட்டை கதவுகளாக இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கும்பம்:

Kumbam Rasiகும்பம் ராசியினர் வாழ ராசியான வீடு தென் திசையை பார்த்தவாறு வாயிலைக் கொண்ட வீடு தான். இவர்கள் தாங்கள் புதிதாக வாடகைக்கு வேறு ஒரு வீட்டிற்கு குடி புகுவதோ அல்லது இவர்களின் சொந்த வீட்டின் புது மனை புகுவிழாவையோ மாசி மாதத்தில் செய்யக்கூடாது.

மீனம்:

meenamமீனம் ராசிக்காரர்கள் வட திசை பார்த்தவாறு தலை வாயில்கள் கொண்ட வீடுகளில் குடியிருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கருகில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி செல்லும் பாதைகளோ, சாலைகளோ இருந்தால் இவர்களுக்கு நல்ல யோகத்தை தரும்.