குக்கரில் இரண்டு விசில் வைத்தால் போதும் சுவையான வெஜிடபிள் பிரியாணி நொடிப்பொழுதும் தயாராகிவிடும்

veg-biriyani
- Advertisement -

வெஜிடபிள் பிரியாணி  காய்கறி பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகை. பொதுவாக பிரியாணி என்பது இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பிரியாணியை விரும்பாதவர்கள் என்று எவரும் இல்லை. எந்தவித பண்டிகையாக இருந்தாலும், சந்தோஷ சூழ்நிலையாக இருந்தாலும் உடனே அனைவரும் கேட்பது பிரியாணி தான். அவ்வாறு பிரியாணி பிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் சமீப காலங்களில் காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி. இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரஷர்குக்கரில் இதனை எளிய முறையில் செய்யலாம். வாருங்கள் இந்த வெஜிடபிள் பிரியாணி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நெய் – 2 ஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, ஏலக்காய் – 3, சிறிய துண்டு பட்டை – 1, லவங்கம் – 4, மராத்தி மொக்கு – 1, பெரிய வெங்காயம் _ 1, தக்காளி – 1, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், மல்லித்தூள் _ 1 ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, கேரட் – 5, பீன்ஸ் – 5, பாஸ்மதி அரிசி – 1 கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், பச்சை பட்டாணி – 1/4 கப், கொத்தமல்லி இலைகள் – ஒரு கையளவு, புதினா இலைகள் _ சிறிதளவு, சிவப்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,

- Advertisement -

செய்முறை:
அரிசியை கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,  மற்றும் தக்காளி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் மராத்தி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

- Advertisement -

மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும்.

ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிரஷர் குக்கரை மூடுவதற்கு முன்பு 2 ஸ்பூன் சமையல் எண்ணெய்/நெய் சேர்க்கலாம். பிரஷர் குக்கரை மூடி , 2 சத்தம் வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு, பிரஷர் ரிலீசாகும் வரை காத்திருக்கவும், சுவையான வெஜிடபிள் பிரியாணி தயாராகிவாடும். .

- Advertisement -