- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இதுவரைக்கும் ஆட்டுக்காலை வைத்து தான் பாயா செய்து பார்த்திருப்பீர்கள் இட்லியை வைத்து பாயா செய்யலாம் என்று...

இதுவரைக்கும் ஆட்டுக்காலை வைத்து தான் பாயா செய்து பார்த்திருப்பீர்கள் இட்லியை வைத்து பாயா செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாங்க மீதமான இட்லி இருந்தா போதும் அட்டகாசமான பாயா தயார் பண்ணலாம்.

- Advertisement -

நம்முடைய வீடுகளில் பெரும்பாலும் டிபனுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்வோம். இதில் தோசையை தேவைக்கு ஊற்றி கொள்வோம். ஆனால் இட்லியை பொருத்த வரையில் எப்படி செய்தாலும் ஒன்று இரண்டு இட்லி மீதமாகி விடும். அதை அடுத்த வேளைக்கு சாப்பிடுவோம் அல்லது அதை வைத்து வேறு டிஷ் ஏதாவது செய்து சாப்பிடுவோம். இந்த சமையல் குறிப்பு பகுதியில் அப்படி மீந்த இட்லியை வைத்து அட்டகாசமான பாயா ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த பாயா செய்வதற்கு முதலில் 200 கிராம் மீல்மேக்கரை சுடுதண்ணீரில் ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் ஒட்ட பிழிந்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பவுலில் மசித்த உருளைக்கிழங்கு அரைத்த மீல் மேக்கர் இரண்டையும் ஒன்றாக சேர்த்த பிறகு அதில் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன் சீரகத் தூள் கால், டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கைகளாலே பிசைந்து உருண்டை ஆக பிடித்து வைத்து விடுங்கள்.

இப்போது நான்கு இட்லியை எடுத்து நம் விரல் நீளத்திற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் ஏற்கனவே பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு மீல்மேக்கர் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டை பிடித்து உருண்டையும் நடுவில் இட்லியை வைத்து இட்லியின் முக்கால் பாகம் வரை இந்த மாவை வைத்து மூடி விடுங்கள் இப்பொழுது இதை பார்ப்பதற்கு ஆட்டு கால் போலவே இருக்கும். இப்படி அனைத்தையும் தயார் செய்த பின் அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து இதை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பாயா தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இரண்டு ஏலக்காய், நான்கு லவங்கம், ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், மூன்று பச்சை மிளகாய், கால் கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு இதையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது இத்துடன் பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 10 உடைத்த முந்திரிப் பருப்பு ஒரு ஸ்பூன் கசகசாவை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அதையும் சேர்த்த பிறகு இவை அனைத்தையும் நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கால் டீஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொறிந்த பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து எண்ணெயிலே வதக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்ல புடலங்காய் இருந்தா ஒரு முறை இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சு குடுங்க. சிக்கன் 65 வே தோற்றுப் போகும் அளவுக்கு சுவையில சூப்பரா இருக்கும்.

அதன் பிறகு ஒரு பெரிய தக்காளியை சின்னதாக நறுக்கி சேர்த்து கொஞ்சமாக மஞ்சள் தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி குழைய வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இதில் ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு நாம் ஏற்கனவே எண்ணெயில் பொரித்து வைத்த உருளைக்கிழங்கு மீல்மேக்கர் உருண்டைகளை இதில் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அட்டகாசமான சுவையில் சூப்பரான இட்லி பாயா தயார்.

சற்று முன்