சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே 15 நிமிடத்தில் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

sandwich

கடைகளுக்கு சென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வெஜிடபிள் சாண்ட்விச் விருப்பமாக சாப்பிடுவார்கள். இன்று வெளியே ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட முடியாத சூழ்நிலை. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வெஜிடபிள் சாண்ட்விச் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபியை தெரிஞ்சுகிட்டு இன்னைக்கு ஈவ்னிங் உங்களுடைய வீட்லயும் நீங்க இத கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும். மிஸ் பண்ண கூடாது.

potato

பெரிய அளவு உருளைக்கிழங்கை வெட்டி குக்கரில் போட்டு, கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக வேகவைத்து எடுத்து தோல் உரித்து தண்ணீர் இல்லாமல் மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

கேரட், பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர் இப்படி உங்களுடைய வீட்டில் என்ன காய்கறி இருக்கின்றதோ அதை பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் சேர்ப்பது உங்களுடைய இஷ்டம்தான். அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து வதக்கி விட்டு அதன் பின்பு, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை உங்களுடைய தேவைக்கு ஏற்ப வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.

sandwich1

இப்போது மசாலாவிற்கு தேவையான உப்பைத் தூவி விடவேண்டும். அடுத்தபடியாக காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, மிளகாய்தூள் இந்த இரண்டு பொருட்களையும் சேர்க்க வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து இந்த காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காய்கறிகள் நன்றாக வெந்ததும் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு ஸ்மேஷர் வைத்து எல்லா காய்கறிகளையும் நன்றாக நசுக்கி விட வேண்டும். ஸ்மாஷர் உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. மத்து அல்லது டம்ளரின் பின்பக்கத்தை வைத்து எல்லா காய்கறிகளையும் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது மசாலா தயார். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி விடுங்கள்.

sandwich4

ஒரு பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதன்மேல் தயாராக இருக்கும் மசாலாவை தேவைக்கு ஏற்ப எடுத்து போட்டு நன்றாக பரப்பி கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிலேயே சீஸ் இருந்தால் அதை மசாலாவின் மேலே வைத்து அதற்கு மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைக்க வேண்டும். சீஸ் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

sandwich3

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பிரட் துண்டுகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைக்க வேண்டும். ஒரு கரண்டியை வைத்து மேலே அழுத்தி பிரெட் துண்டுகளை சிவக்க வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் இரண்டு துண்டுகளும் பிரியாமல் பக்குவமாக வரும்.

sandwich2

அவ்வளவு தான். சூப்பரான வெஜிடபிள் சாண்ட்விச் தயார். ஒரு கத்தியைக் கொண்டு உங்களுக்குப் பிடித்தது போல் இந்த வெஜிடபிள் சாண்ட்வெஜ்சை கட் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுத்துப் பாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக விருப்பமாக சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.