ஸ்டார் ஹோட்டல் ‘வெஜிடபிள் குருமாவை’ நம் வீட்டிலேயும் சுலபமாக வைக்கலாம். ஒரே ஒரு, ரகசிய டிப்ஸ்!

veg-kuruma1

ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் வெஜிடபிள் குருமாவை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். ஸ்டார் ஹோட்டல் குருமா அவ்வளவு சுவையாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது என்ன டிப்ஸ் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த குருமாவை சப்பாத்தி, ரொட்டி, தோசை, இடியாப்பம், இவர்களுக்கு சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம். நமக்கு எல்லோருக்கும் பிடித்த சூப்பர் வெஜிடேபிள் குருமாவை எப்படி வைப்பது பார்த்து விடலாமா?

veg-kuruma

Step 1:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில், 1 ஸ்பூன் அளவு, கசகசாவை போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள்.

Step 2:
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல் 2 கைப்பிடி அளவு, முந்திரி-10, ஊறவைத்த கசகசா இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மைய, விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Step 3:
பெரிய கேரட் – 1, பச்சை பட்டாணி – 1 கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு – 1, பீன்ஸ் – 6, காலிபிளவர் இருந்தால் – 1 கப் அளவு, எடுத்துக் கொள்ளலாம். இந்த காய்கறிகள் அனைத்தையும் குருமாவிற்கு தேவையான வடிவத்தில், பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இந்த காய்கறிகளை குக்கரில் போட்டு ஒரு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடாதீர்கள். சத்து வெளியே சென்றுவிடும்.

- Advertisement -

Step 4:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதில் சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, கருவேப்பிலை, இவைகளைப் போட்டு தாளிக்க வேண்டும். அடுத்ததாக, பொடியாக வெட்டிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய 4 பச்சை மிளகாயை போட்டு, வதக்கவேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய தக்காளி – 1 போட்டு வதக்க வேண்டும்.

choped-veg

அடுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, நன்றாக வதக்கி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, வேக வைத்த காய்கறிகளை இதோடு கொட்டி, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

donkey milk

குருமா, தண்ணீர் பதத்திற்கு சென்றுவிடக்கூடாது. கிரேவி பதத்தில் இருக்க வேண்டும். இறுதியாக இறக்குவதற்கு முன்பு, ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பாலை, இந்த குருமாவில் சேர்த்து, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தழையை தூவி, பரிமாறினால் சுவையான, சூப்பரான வெஜிடபிள் குருமா தயார். காய்ச்சிய பாலை ஊற்றி குருமா செய்து பாருங்கள்! இதன் சுவை உங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் பக்குவத்தை தரும்.

இதையும் படிக்கலாமே
தோட்டத்தில், வீட்டில் எலி தொல்லையா? என்ன பண்ணாலும் போகலையா? இத மட்டும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க ஒரு எலி கூட உங்க கண்ணுல படாது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.