- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற வேல் வழிபாடு

வேண்டுதல் நிறைவேற வேல் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பொருட்களாக ஒவ்வொரு பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களில் அந்த தெய்வம் நீக்கமற நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அந்த பொருட்களில் சில தான் வேல், சூலாயுதம், அரிவால் போன்றவை. முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு வேலை வைத்து பலரும் தங்கள் இல்லத்தில் வழிபடுவார்கள். அப்படி வேலை வைத்து எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முருகர் வழிபாடு

சூரனை வதம் செய்வதற்காக சக்தி தேவியால் தரப்பட்ட ஆயுதம் தான் வேல். வேல் என்பது சக்தியின் ரூபமாகவே திகழக்கூடியது. அப்படிப்பட்ட வேலை நம்முடைய வீட்டில் வைத்து நாம் வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கும். அதோடு மட்டுமல்லாமல் என்ன வேண்டுதல் நாம் வைக்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த வேல் வழிபாட்டை எந்த முறையில் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட வேலை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி அல்லது வரப்போகும் வைகாசி விசாகம் போன்ற தினங்களில் ஆரம்பிக்கலாம். 48 நாட்கள் என்று கணக்கு வைத்தும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். அல்லது நிரந்தரமாக நம்முடைய பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம்.

முதலில் வேலை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு கலசத்தை எடுத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதற்குள் இந்த வேலை வைக்க வேண்டும். இப்பொழுது வேலிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு பல பொருட்களை தேட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சுத்தமான தண்ணீரை மட்டும் வைத்துக் கூட நாம் தினமும் வேலுக்கு அபிஷேகம் செய்யலாம். சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு பச்சரிசியை எடுத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

மறுபடியும் புதிதாக பச்சரிசியை நிரப்பி அதில் வேலை வைத்து வேலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்களை சூட்ட வேண்டும். வேலின் நுனியில் கெட்டியாக சந்தனத்தைக் குழைத்து கூர்மை தெரியாத அளவு வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வேல்மாறல் அல்லது 108 வேல் போற்றி இவற்றை மனதார கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடித்த பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார முருகப்பெருமானிடம் கூற வேண்டும்.

கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். தினமும் அபிஷேகம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது அபிஷேகம் செய்து விட்டு, மற்ற நாட்களில் வேலிற்கு அர்ச்சனை மட்டும் செய்து கொள்ளலாம். அதாவது 108 போற்றிகளை மட்டும் கூறி அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

48 நாட்கள் ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை நினைத்து வேல் வழிபாடு செய்வதாக இருந்தால் 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு அந்த வேலை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வில்வாபிஷேகம்

வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து முருகப்பெருமானின் வேலை வீட்டில் வைத்து வழிபட்டால் வேலவன் நிச்சயமாக அருள் புரிவர்

சற்று முன்