- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற

வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற

- Advertisement -

ஒருவர் கஷ்டப்பட்டு படிப்பதற்கு காரணம் அந்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். எதிர்காலத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள். அப்படி படிக்கக்கூடிய அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த வேலைகள் கிடைப்பது இல்லை. அதையும் மீறி வேலைகள் கிடைத்தாலும் அவர்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காத சூழ்நிலையும் ஒரு சிலருக்கு இருக்கும். இன்னும் சிலரோ அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பதற்காக கடினமாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கும். இப்படி வேலை தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்க போகிறோம்.

வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற

வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்றால் ஒருவருக்கு சூரிய பகவானின் அருள் என்பது வேண்டும். அதிலும் குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பவர்களுக்கு சூரிய பகவானின் அருள் இருந்தால் மட்டுமே அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். அப்படி சூரிய பகவானை வழிபாடு செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ச்சியாக 5 வாரங்கள் வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். யாருக்கு வேலை வேண்டுமோ, வேலை தொடர்பான வேண்டுதல் இருக்கிறதோ அவர்கள் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமையாக வாங்கி அதை அரைத்து மாவாக்கிக் கொள்வது என்பது சிறப்பு. இயலாதவர்கள் மாவாக வாங்கிக் கொள்ளலாம். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி விளக்கு செய்வதுபோல் மாவை தயார் செய்து ஒரு சிறிய விளக்கு போல் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இதில் சுத்தமான பசு நெய் ஊற்ற வேண்டும். வெள்ளை பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 5 வாரங்கள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:லட்சுமி கடாட்சம் பெற புரட்டாசி முதல் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு சூரிய பகவானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்