இந்த 2 பொருள் உங்களுடைய வீட்டில், 30 நாட்கள் இருந்தாலே போதும். தெய்வ சக்தி உங்கள் வீடு தேடி வந்து குடியேறிவிடும்.

amman1

தெய்வ அம்சம் நம் வீட்டில் நிறைந்திருக்க எத்தனையோ பூஜை புனஸ்காரங்களை செய்கின்றோம். இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்தின் மூலம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றது. கையில் காசு பணத்தை தங்க விட மாட்டேங்குது. வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய் படுகிறார்கள். கஷ்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் கெட்ட ஆற்றலை வெளியேற்ற வேண்டும். வீட்டிற்குள் நல்ல ஆற்றலான தெய்வ சக்தி குடியேற வேண்டும். இதற்கு தாந்திரீக ரீதியாக எந்த இரண்டு பொருட்களை நம்முடைய வீட்டில், எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு சின்ன தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thirusti poosani

இந்த இரண்டு பொருட்களும் ஒரு காய் வகையை சேர்ந்தது. கொஞ்சம் சிரமப்படாமல் இந்த இரண்டு காய்களையும் வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துப் பாருங்கள். வீட்டில் எப்பேர்பட்ட கெட்ட சக்தி இருந்தாலும் அதை இந்த இரண்டு காய்கள் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும். அதன்பின்பு வீட்டில் எந்த கெட்ட ஆற்றலும் இருக்காது. தானாக தெய்வம் உங்கள் வீட்டில் வந்து குடிகொள்ளும். நீங்கள் இதை முயற்சி செய்து கூட பார்க்க வேண்டாம். இப்படி செய்து சோதித்துப் பாருங்களேன். நல்லது நடக்கிறதா, இல்லையா என்று.

அது என்ன அப்படி அதி அற்புதம் வாய்ந்த இரண்டு காய்கள்? வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி. வெள்ளை பூசணியை திருஷ்டி பூசணிக்காய் என்று கூட சொல்லுவார்கள். இந்த மஞ்சள் பூசணியை பரங்கிக்காய் என்று சொல்லுவார்கள். இது இரண்டுமே நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்த கூடிய காய்கறிகள் தான்.

poosanikai

வெள்ளைப் பூசணியில் ஒரு முழு காய், மஞ்சள் பூசணியில் ஒரு முழு காயை வாங்கி கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் வெள்ளை பூசணியை வடகிழக்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். மஞ்சள் பூசணி என்று சொல்லப்படும் பரங்கிக்காயை தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

வீட்டிற்கு வருபவர்கள் இதைப்பார்த்து இந்த காயை, ஏன் இந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கட்டாயம் கேள்வி கேட்பார்கள். ஆகையால் இந்த காயை யார் கண்ணுக்கும் தெரியாமல், ஏதாவது அலமாரியின் மேல் பக்கத்தில், பரண்மேல் வைத்தாலும் தவறு கிடையாது. ஆனால் எந்த ஒரு பொருளை போட்டும் இதை மூடி வைக்கக்கூடாது. திறந்தபடி தான் இருக்க வேண்டும்.

vasthu for study room

அமாவாசை அன்று இந்த இரண்டு காய்களை வாங்கி உங்களுடைய வீட்டில், இந்த திசையில் வைக்கலாம். அப்படி முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இதை வாங்கி உங்களுடைய வீட்டில் இப்படி வைத்துக்கொள்ளலாம். நீங்கள் வைத்த நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து இந்த காயை ஒரு கவரில் போட்டு, யார் கண்களுக்கும் தெரியாமல் கட்டி கண்ணுக்கு தெரியாமல் உங்கள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் கொண்டு போய் போட்டு விட்டு வர வேண்டும்.

3-god-picture

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையுமே இந்த இரண்டு காய்கள் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். உங்கள் வீடு சுத்த படுத்தப்படும். கெட்ட சக்திகள் வெளியேறிய பின்பு நல்ல சக்திகள் இறை சக்திகள் உங்கள் வீட்டிற்குள் வந்து நிச்சயமாக குடிகொள்ளும். 30 நாட்களுக்குள் இந்த காய்கள் உங்களுடைய வீட்டில் அழுகிப் போய் விட்டால். அதை உடனே மாற்றி விடுங்கள். எதிர்மறை ஆற்றல் உங்களுடைய வீட்டில் அதிகமாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதாக அர்த்தம்.