அதிர்ஷ்டம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் குடி கொள்ள, இந்த 1 பூவை, ஒரே ஒருமுறை உங்கள் வீட்டிற்குள் எடுத்து வந்தால் கூட போதுமே! அது எந்த பூ? நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?

vinayagar
- Advertisement -

பூக்கள் என்றாலே அது இறைவனுக்காக படைக்கப்பட்ட ஒன்று. வாசனை மிகுந்த மலர்களை நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவ படத்திற்கு சூட்டி, பூஜை செய்தாலே நமக்கு மனநிறைவு ஏற்பட்டு விடும். வாசனை நிறைந்த பூக்கள் இல்லாத பூஜை, மன நிறைவை தராது. பூக்கள் இல்லாமல் பூஜை செய்தால் ஏதோ ஒரு விதத்தில் மனசஞ்சலம் நமக்கு இருக்கத்தான் செய்யும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால், அதற்காக வாசனை இல்லாத எந்த பூவையும் இறைவனுக்கு சூட்டி வழிபடக் கூடாது. முடிந்தவரை வாசனை இல்லாத பூக்களை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தாமல் இருப்பது நமக்கு நன்மையை கொடுக்கும். சரி, குறிப்பாக எந்த பூவை நம் வீட்டில் இறைவனுக்கு சூட்டினால் அதிர்ஷ்டம் அடித்து கொண்டு ஓடி வரும், வீட்டில் சுபிட்சம் நிலைக்கும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

velleruku

இந்த பூவின் பெயரைச் சொன்னவுடன் எல்லோரும் இந்தப் பூவுக்குள் இத்தனை அதிசயம் மறைந்துள்ளதா! என்று நிச்சயமாக ஆச்சரியப்பட தான் செய்வீர்கள். ஏனென்றால், இந்தப் பூவை இறை வழிபாட்டில் பயன்படுத்தும் வழக்கத்தை நாம் வைத்துக் கொள்வதே கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று தான் பயன்படுத்துவோம். இப்போது உங்களுக்கே தெரிந்து இருக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று நாம் விநாயகருக்கு சூட்டும் பூ என்றால் அது ‘எருக்கன் பூ’.  ஊதா எருக்கன் பூ நமக்கு சுலபமாக கிடைத்து விடும்.

- Advertisement -

ஆனால் வெள்ளருக்கன் செடிகளில் பூக்க கூடிய வெள்ளெருக்கம்பூ என்பது நமக்கு அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடாது. இந்த வெள்ளை எருக்கன் செடியில் வெள்ளருக்கன் பூவில், மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், அதிர்ஷ்டம் நிறைந்து இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் தானோ என்னமோ வெள்ளருக்கன் விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் செல்வ வளமும், லட்சுமி கடாட்சமும் சுபீட்சமும் வீட்டில் நிறைந்திருக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் அப்போதே சொல்லி வைத்துள்ளார்கள்.

Vellerukka Vinayagar

வெள்ளெருக்கன் பூ செடிகள் வளர்ந்து இருக்கும் இடத்தில் பாம்புகளின் நடமாட்டம் இருக்கும். ஏனென்றால், வெள்ளருக்கன் பூச்செடி இருந்தால், அந்த இடத்தில் புதையல் இருக்கும் என்பதும் நம்முடைய முன்னோர்களின் கூற்று. அந்த புதையலை பாதுகாப்பதற்கா பாம்பு, அந்த இடத்தில் குடிகொண்டிருக்கும் என்ற சில கருத்துக்களும் இதுநாள்வரை இருந்துதான் வருகின்றது.

- Advertisement -

இதனாலேயே அந்த பூவை நாம் வழிபாட்டிற்காக பயன்படுத்துவது கிடையாது. வழிபாட்டிற்கு உகந்த பூக்களில் நிச்சயமாக இந்த வெள்ளெருக்கன் பூவையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் விநாயகரது படம் அல்லாமல், மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கும் தாராளமாக இந்த வெள்ளெருக்கன் பூ சூட்டி வழிபாடு செய்யலாம் தவறில்லை.

vinayagar1

குறிப்பாக உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கின்றது. தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கின்றது. வீட்டில் சுபிட்சம் இல்லை. மன நிம்மதி இல்லை. லட்சுமிகடாட்சம் இல்லை, என்ற பட்சத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் 2 வெள்ளெருக்கன் பூவைப் போட்டு வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம், அல்லது பூஜை அறையிலும் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

erukan-malai

இப்படி செய்தால் உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அழிக்கப்பட்டு, நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதை உங்களால் மனரீதியாக நிச்சயமாக உணர முடியும். இதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை தேடி வந்து உங்களை திருப்திபடுத்தும். அதன்மூலம் உங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -