சாதாரணமாக மஞ்சளை பிடித்து வைத்தாலே பிள்ளையார் அதில் ஆவாஹனம் ஆகிவிடுவார். கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருக்கக் கூடிய பிள்ளையார், எல்லா கடவுள்களுக்கும் முழுமுதற் கடவுளாக விளங்குகிறார். தும்பிக்கை நாயகனை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. செய்யும் தொழிலில் உங்களை யாரும் வீழ்த்தாமல் இருக்க, பன்மடங்கு லாபம் பெருக வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு எப்படி செய்வது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.
வெள்ளெருக்கு பிள்ளையார் சிலை வெள்ளெருக்கு செடியின் வேரிலிருந்து நுணுக்கமான முறையில் தயார் செய்யப்படுகிறது. இயற்கையாகவே வெள்ளெருக்கு சிலைக்கு அதி அற்புத அபூர்வ சக்திகள் சிலவை இருக்கும். எருக்கஞ்செடியிலிருந்து தான் சிலை தயாரிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை பரிசோதித்து வாங்கிக் கொள்ளுங்கள். அதை வீட்டிற்கு கொண்டு வந்ததும் ஒரு மனை அல்லது தாம்பூலத்தில் வைக்க வேண்டும்.
ராகு கால வேளையில் வெள்ளெருக்கு பிள்ளையாருக்கு முதலில் மஞ்சள் முழுவதுமாக தடவி காய வைக்க வேண்டும். மஞ்சள் நன்கு காய்ந்ததும் மறுநாள் ராகு கால வேளையின் போது அதற்கு சந்தனம் தடவ வேண்டும். சந்தனம் தடவி காய்ந்த பிறகு, குங்குமம் வைத்து பூவால் வெள்ளெருக்கு பிள்ளையாரை அலங்கரித்து மனையில் அல்லது தாம்பூலத்தில் வைத்து, எங்கு நீங்கள் வைக்க வேண்டுமோ, அங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும். பிள்ளையாருக்கு உகந்த வன்னி மர இலைகள், அருகம்புல், எருக்கம் பூ ஆகியவற்றை திருவடியில் வைத்து கற்கண்டு நைவேத்தியம் படைத்து மனதார பிரார்த்தனை செய்து வர வேண்டும்.
வீட்டில் இப்படி வெள்ளெருக்கு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வணங்கி வருபவர்களுக்கு செல்வம் மளமளவென உயர தொடங்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும், துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு அபிஷேகம் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதற்கு தூப, தீபம் காண்பித்து வந்தால் போதுமானது.
இந்த சிலையை தொழில் செய்யும் ஸ்தாபனங்களில் வைத்து அதற்கு ஜவ்வாது, புனுகு, அத்தர் ஆகியவற்றை படைத்து தினமும் தீப, தூப, ஆரத்தி காண்பித்து விளக்கேற்றி வைத்து வழிபட்டு வந்தால், தொழிலில் உங்களை எதிரிகளாக நினைப்பவர்கள் கூட தோற்றுப் போவார்கள். உங்களை வீழ்த்த வேண்டும் என்று எண்ணுபவர்களால் எந்த விதமான சதி செயலையும் உங்களுக்கு எதிராக செய்ய முடியாது போகும். ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு தினமும் எருக்கம் பூ மாலை சாற்றி, தூப, தீப ஹாரத்தி காண்பித்து வாருங்கள்.
இதையும் படிக்கலாமே:
நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை சூப்
தொழில் செய்பவர்கள், வேலை செய்பவர்கள் அலுவலகங்கள் போன்றவற்றிலும் இந்த பிள்ளையார் வழிபாடு செய்து வந்தால் தடைகள் இல்லாத வெற்றிகளை குவிக்கலாம். எந்த ஒரு நல்ல காரியத்திற்கு போகும் பொழுதும் வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டு சென்றால், சென்ற காரியம் நன்றாக நடைபெறும் என்பது ஐதீகம். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் அனைத்து இன்னல்களும் நீங்கும். வல்வினை நீங்கி, நல்ல பெயரும், புகழும் ஓங்கி உயரும். அபூர்வ சக்திகள் கொண்டுள்ள இந்த சிலையில் விரிசல்களோ, கீரல்களோ இல்லாமல் பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.