- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வெள்ளிப் பொருட்களை ஈசியா சுத்தம் செய்ய

வெள்ளிப் பொருட்களை ஈசியா சுத்தம் செய்ய

- Advertisement -

வெள்ளிப் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது என்னவோ அதை ஆசையாக தான் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அது கறுத்து விட்டால் மறுபடியும் அதை பழையபடி பளிச்சென்று மாற்ற அதிகமாக மெனக்கெட வேண்டி இருக்கிறது. அதிலும் வெள்ளியில் பூஜை பொருட்களை பயன்படுத்தும் போது அதை சுத்தம் செய்வது இன்னமே கூட கொஞ்சம் சிரமம் தான். ஏனெனில் அதில் இருக்கும் எண்ணெய் கறையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும் அல்லவா. இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் மிகவும் எளிமையான முறையில் இந்த வெள்ளிப் பொருட்களை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி பூஜை பொருட்களை எளிமையான முறையில் சுத்தம் செய்ய
இந்த சுத்தம் செய்ய நாம் தேவையில்லை என்று நினைத்து தூக்கிப் போடும் கொட்டாங்குச்சியை வைத்து தான் நாம் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யப் போகிறோம். கொட்டாங்குச்சி வைத்து எப்படி சுத்தம் செய்வது என பலருக்கும் தோன்றலாம் வாங்க அதையும் தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

முதலில் கொட்டாங்குச்சி நாம் சாம்பிராணி தூபம் போடுவதற்கு எப்படி தீ மூட்டுவோமோ அதே போல செய்து கொள்ளுங்கள். தீ முற்றிலுமாக அணைந்து அது கருப்பு துகள்களாக மாறி உதிரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு அதில் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள். இதில் பழத்தின் சாறை பிழிந்து விடும் பொழுது அதில் இருக்கும் தீயும் அணிந்து விடும். இந்த சாறும் அதில் நன்றாக ஊறி விடும். நெருப்பு முற்றிலுமாக அணைந்து ஆறு விட்டதா என்பதை பார்த்துக் கொண்டு கொட்டாங்குச்சி துகளிலும் எலுமிச்சை சாறையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது அதிக பேஸ்ட் போல இருக்காது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும்.

இந்த கலவையுடன் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் எந்த வித லிக்விட வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நீங்கள் பாத்திரம் தேய்க்க சோப்பை பயன்படுத்துவதாக இருந்தால் அந்த சோப்பையும் கொஞ்சம் கரைத்து இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். பூஜை பொருட்களை சுத்தம் செய்ய முதலில் டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணியை வைத்து அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு அனைத்தையும் சுத்தமாக துடைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கலந்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட்டை விளக்கு மற்ற பூஜை பொருட்களின் மீது தடவிய பிறகு லேசாக கை வைத்து தேய்த்தாலே போதும் அழுக்குகள் மொத்தமாக நீங்கி விடும். இதற்கு என தனியாக ஒரு டூத் பிரஷ் வைத்துக் கொள்ளுங்கள். விளக்குகளின் மூளை முடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய இது உதவியாக இருக்கும்.

இதை தேய்த்த பிறகு சுத்தமான தண்ணீரில் இந்த பூஜை பொருட்களை அலம்பிய பிறகு மறுபடியும் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து நன்றாக துடைத்து ஈரமில்லாமல் காய வைத்து எடுத்து விடுங்கள். அப்போது தான் வாங்கிய வெள்ளி பொருட்கள் போல அவ்வளவு பளபளப்பாக இருக்கும். இது நீண்ட நாட்கள் கருக்காமல் இருக்க சிறிதளவு விபூதியில் ஒரு பின்ச் கற்பூரத்தையும் கலந்து அந்த பவுடரை விளக்கின் மீது தேய்த்து வைத்து விடுங்கள். விளக்கு எப்போதும் பார்க்க மங்களகரமாகவே இருக்கும்.

இதையும் படிக்காலமே: இரும்பு தோசை கல்லை மாதத்திற்கு ஒரு முறை இப்படி செஞ்சி வச்சிடீங்கன்னா போதும் எப்ப தோசை ஊற்றினாலும் நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியா கல்லில் ஒட்டாமல் வரும். இனி உங்க ஆயுசுக்கும் தோசை கல்லை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

வெள்ளி பூஜை பொருட்கள் மட்டும் இல்லாது நாம் காலில் அணியும் கொலுசு, குழந்தைகளின் காப்பு மற்ற எந்த வெள்ளிப் பொருட்களாக இருந்தாலும் இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள் அத்தனையும் பளிச்சென்று இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்