வியாழக்கிழமை இரவு பூஜை அறையில் இதை மட்டும் செய்தாலே போதும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் நுழைய எந்த தடையும் இருக்காது.

mahalakshmi

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, ‘மகாலட்சுமி பூஜை’ செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஆனால் வியாழக்கிழமை நம் வீட்டுப் பூஜை அறையில் சில விஷயங்களை செய்வதன் மூலமும், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு நம் வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வத்தை நினைத்து எப்படி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வியாழக்கிழமை இரவு எப்படி வழிபாடு செய்தால், வெள்ளிக்கிழமை மன மகிழ்ச்சியோடு நம் வீட்டிற்குள் மகாலட்சுமியாகபட்டவள் வருகை தருவாள் என்பதைப் பற்றிய ஒரு பரிகார முறையை தான், இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

பொதுவாகவே வியாழக்கிழமை மாலை நேரத்தில் குபேரரை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். அவரவர் வீட்டு பூஜை அறையில் வியாழக்கிழமை மாலை தீபமேற்றி, லட்சுமி குபேரரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். லட்சுமி குபேரரை நினைத்து ஏற்றிய தீபத்தை வியாழக்கிழமை குளிர வைக்கக் கூடாது.

நீங்கள் லட்சுமி குபேரரை நினைத்து ஏற்றிய தீபத்தின் அருகில் ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை வைத்து, அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து, அதன் மேலே மஞ்சள் நிறப் புஷ்பத்தை தூவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். வியாழக்கிழமை இரவு முழுவதும் வீட்டில் ஏற்றிய தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

sembu-sombu

மறுநாள் காலை வெள்ளிக்கிழமை அன்று எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, விளக்கிற்கு அருகில் வைத்த சொம்பு தண்ணீரை எடுத்து துளசிச் செடிக்கு அல்லது மற்ற வேறு ஏதாவது செடிகளுக்கு ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரை துளசிச் செடிக்கு ஊற்றினால் வீட்டிற்கு மிகவும் நல்லது. அந்த லட்சுமி தேவியே நிரந்தரமாக உங்கள் வீட்டில் குடி கொள்வாள்.

- Advertisement -

வியாழக்கிழமை இரவு நாம் லட்சுமி குபேரரை மனதார நினைத்து, இந்த வழிபாட்டினை நம் வீட்டில் செய்தால் மறுநாள் காலை நாம் செய்யக்கூடிய வெள்ளிக்கிழமை பூஜையில் பல மடங்கு பலனை நம்மால் பெறமுடியும். மகாலட்சுமி நம் வீட்டுக்குள் நுழைவதற்கு எந்த தங்கு தடையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

thulasi

கையில் வருகின்ற வருமானம் நிலையாக நிற்கவில்லை, வீண்விரயம் ஆகிக் கொண்டே இருக்கின்றது, வீட்டில் வறுமை, இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த வழிபாட்டு முறை நல்ல பலனைக் கொடுக்கும். வியாழக்கிழமை மாலை ஏற்றிய தீபத்தை வெள்ளிக்கிழமை விடியும் வரை, வெள்ளிக்கிழமை காலை மகா லட்சுமி பூஜையை நிறைவு செய்து விட்டுத்தான் அதன் பின்பு மலையேற்ற வேண்டும்.

poojai

வெள்ளிக்கிழமை பூஜை தொடங்குவதற்கு முன்பாகவே, சொம்பில் இருக்கும் தண்ணீரை துளசிச் செடியில் சேர்த்து விடுங்கள். அவ்வளவு தான். இப்படி எத்தனை வாரங்கள் செய்யலாம்? உங்களால் எத்தனை வாரங்கள் செய்ய முடியுமோ, உங்கள் பிரச்சனைகளுக்கு எத்தனை வாரங்களில் விடிவுகாலம் பிறக்கின்றதோ, அது வரை தாராளமாக செய்யலாம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தவர்கள் பலர் கைமேல் பலனை அடைந்து உள்ளார்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.