வெள்ளிக்கிழமை உப்புடன் சேர்த்து இந்த பொருட்களையும் கொஞ்சம் வாங்கி தான் பாருங்களேன்! அளவில்லாத அதிர்ஷ்டத்தை அந்த மகாலட்சுமி உங்களுக்கு வாரி வழங்கி விடுவாள்.

mahalakshmil
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே சுக்கிர ஹோரையில் நம்முடைய வீட்டிற்கு கல் உப்பை வாங்கி வருவது லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். வெள்ளிக்கிழமை அந்த உப்புடன் சேர்த்து மேலும் நாம் சில பொருட்களை நம் வீட்டிற்கு வாங்கி வந்தோமேயானால், அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்தெந்த பொருட்கள் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அழகான வாசம் நிறைந்த எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

வீட்டில் மகாலட்சுமியின் ஸ்வரூபமாகவே இருப்பவர்கள் பெண்கள். வெள்ளிக்கிழமையில் பெண்கள் நிறைந்த அழகோடு இருக்க வேண்டும். அதாவது இதற்கு அர்த்தம் செயற்கையான மேக்கப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. ஆடம்பரமான பொருட்களை உடுத்திக் கொண்டு அழகாக இருக்கவேண்டும் என்பதும் அர்த்தம் கிடையாது.

- Advertisement -

நெற்றியில் குங்குமப் பொட்டு நிரம்ப, கொஞ்சம் மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு, தலையில் பூ வைத்துக் கொண்டு, கையில் வளையல் அணிந்து கொண்டு, காலில் கொலுசு சத்தத்தோடு கிழிசல் இல்லாத, உடையில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள். கட்டாயமாக இந்த வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமாவது இரவு உடையான நைட்டியை பகலில் அணிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

women1

பெண்களை அழகு படுத்த கூடிய சாதனங்களில் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள். பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று வாங்கி வருவது நம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எடுத்துக்காட்டிற்கு மருதாணி, கண்களில் இட்டுக் கொள்ளும் மை, பொட்டு, வளையல்கள், மேலும் பெண்கள் அழகு படுத்தும் கூடிய பல வகையான அழகு சாதன பொருட்கள் உள்ளது. கழுத்தில் மாட்டிக் கொள்ளும் மாலை, தலை முடியை அழகுபடுத்த அணிந்து கொள்ளும் சாதனங்கள், சில வாசனை திரவியங்களையும் இந்த வெள்ளிக்கிழமையில் தாராளமாக வாங்கலாம்.

- Advertisement -

பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை முடிந்தவரை வியாழக்கிழமை வாங்குவதை தவிர்த்து கொள்ளவேண்டும். சரிங்க, இது பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கு! நிச்சயமாக ஆண்களுக்கும் தேவையான அழகு சாதனப் பொருட்களையும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

women1

வட மாநிலத்தவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களிடம் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம் தான். முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, அலுவலகத்திற்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி எப்போதுமே மகாலட்சுமி அம்சத்துடன் இருப்பது தான் வீட்டிற்கு நல்லது.

vishnu

இதோடு வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் இந்தவொரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். ஒரு சிறிய மஞ்சள் நிற அல்லது சிவப்பு நிறத் துணி, எந்த துணியை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துணிக்கு உள்ளே கொஞ்சமாக 1 ஸ்பூன் கல் உப்பையும், 3 மிளகையும் சேர்த்து வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, மகாலட்சுமி பூஜை செய்யுங்கள். அதாவது கல் உப்பையும் மிளகையும் இணைப்பது என்பது மகாலட்சுமியையும் விஷ்ணு பகவானையும் இணைந்து வைப்பதற்கு சமம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதையும் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் நிறையவே நன்மைகள் நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -