- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெண்டைக்காய் என்றால் ரொம்ப பிடிக்குமா? பத்தே நிமிடத்தில் இப்படி ஒரு வெண்டைக்காய் பச்சடி செய்து பாருங்கள்...

வெண்டைக்காய் என்றால் ரொம்ப பிடிக்குமா? பத்தே நிமிடத்தில் இப்படி ஒரு வெண்டைக்காய் பச்சடி செய்து பாருங்கள் இன்னும் ரொம்ப பிடிக்கும்!

- Advertisement -

வெண்டைக்காய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதன் வழவழப்பு தன்மை மட்டும் இல்லாமல் இருந்தால் காய்கறிகளில் வெண்டைக்காய் தான் முதலிடம் பிடித்திருக்கும். அந்த அளவிற்கு சுவையுள்ள இந்த வெண்டைக்காயை இப்படி ஒரு முறை பச்சடி போல் செய்து சாப்பிட்டு பாருங்கள், ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த வெண்டைக்காய் பச்சடி சுடச்சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நாவின் சுவை நரம்புகள் சுண்டி இழுக்கும். அத்தகு இந்த வெண்டைக்காய் பச்சடி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

vendakkai

வெண்டைக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 5, பூண்டு பல் – 10, கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, தக்காளி – 2, வெண்டைக்காய் – கால் கிலோ, புளி – ஒரு சிறு துண்டு, தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

வெண்டைக்காய் பச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான காய்கறிகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா விதைகளை போட்டு லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். இவைகள் நன்கு வறுபட்டதும் வர மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.

வர மிளகாய் நன்கு வதங்கி வந்ததும் பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவைகள் வதங்கி வரும் பொழுது சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து வதக்குங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இவற்றை சேர்த்து ஆற விட்டு கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காய்களை சேர்த்து சுருள வதக்க வேண்டும். வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்க நன்கு சூடாக இருக்கும் எண்ணெயில் சேர்த்து வதக்குவது நல்லது.

- Advertisement -

வெண்டைக்காய் பாதி அளவிற்கு வெந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளையும் சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து பின்னர் திறந்து வதக்கினால் வேகமாக வதங்கும். பின்னர் இவற்றை ஆறவிட்டு விடுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் இருக்கும் பொருட்களை ஒரு சுற்று சுற்றி கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் இந்த வெண்டைக் காய்களையும் சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

vendaikkai-pachadi1

பின்னர் இப்பொழுது இந்த வெண்டைக்காய் பச்சடியை தாளிக்க வேண்டும். அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்புகளை பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்ததை வெண்டைக்காய் உடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி வைத்தால் போதும்! சூப்பரான சுவையான வெண்டைக்காய் பச்சடி தயாராகிவிடும். இதே போல நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

சற்று முன்