அட! வெண்டைக்காயை வைத்து இப்படியும் பொடிமாஸ் செய்யலாமா? இன்னைக்கு இந்த பொடிமாஸ் ரெசிபியை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்!

vendaikai-podimas
- Advertisement -

வெண்டைக்காயை வைத்து எத்தனை நாட்கள்தான் வெறும் பொரியல், வெறும் பளிக்குழம்பு, வெறும் சாம்பார் வைத்து சாப்பிடுவது. கொஞ்சம் வித்தியாசமாக இன்னைக்கு இந்த பொடிமாஸ் ட்ரை பண்ணி பாருங்களேன்! வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சில குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்டைக்காயை விரும்பி சாப்பிடும் அளவிற்கு ஒரு ரெசிபி தான் இது. வித்தியாசமான இந்த வெண்டைக்காய் பொடிமாஸ் ரெசிபியை உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

இந்த வெண்டைக்காய் பொடிமாஸ் செய்வதற்கு நமக்கு ஒரு தேங்காய் பொடி தேவைப்படுகிறது. முதலில் அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். இந்த பொடியை தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் எல்லா பொரியல் வகைகளுக்கும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் துருவல் – 4 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் ட்ரை ஃபிரை செய்து கொள்ள வேண்டும். இரண்டு நிமிடங்கள் தேங்காயை பொன்னிறம் வரும் வரை வதக்கினால் போதும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

vendaikai-podimas1

அடுத்தபடியாக அதே கடாயில் 1 – ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணை காய்ந்ததும் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கிராம்பு – 1, ஏலக்காய் – 1, பட்டை – 1, வர மிளகாய் – 4 இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுத்து இதையும் தேங்காய் துருவல் போட்டு வைத்திருக்கும் மிக்ஸி ஜாரில் போட்டு, பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஈரமில்லாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

தேவையான அளவு வெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி துடைத்து பொரியலுக்கு தகுந்தவாறு வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது வெண்டைக்காயை எப்படி பொடிமாஸ் செய்யலாம் என்று பார்த்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து நறுக்கிய வெண்டைக்காய்களை கடாயில் சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்கி தேவையான அளவு உப்பு போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

vendaikai-podimas2

2 லிருந்து 3 நிமிடங்களுக்குள் வெண்டைக்காய் தயாராகி இருக்கும். இதில் பொடித்து வைத்திருக்கும் தேங்காய் துருவல் பொடியை 2 ஸ்பூன் அளவு சேர்த்து, மீண்டும் 1 நிமிடங்கள் வதக்கி பரிமாறினால், சூப்பரான வெண்டைக்காய் பொடிமாஸ் தயார். இதில் கசகசா தேங்காய் மற்ற மசாலா பொருட்களோடு சேர்த்து வறுத்து அரைத்த பொடி சேர்க்கும்போது செம டேஸ்ட் கிடைக்கும். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இந்த ரெசிபியை ட்ரை பண்ண மறக்காதீங்க.

- Advertisement -