புளிக்குழம்பு இல்லாமல், சாம்பார் இல்லாமல், வெண்டைக்காயை வைத்து வித்தியாசமான ஒரு கிரேவி எப்படி செய்யலாம்? ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் கிரேவி!

vendikai
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை வைத்து புளி குழம்பு, சாம்பார், பொரியல் இந்த மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் செய்வோம். அப்படி இல்லையென்றால் மோர் குழம்பு வைப்போம். இது அல்லாமல் புதுவிதமான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில், வித்தியாசமான ஒரு கிரேவியை நம் வீட்டிலேயே எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக இந்த கிரேவியை சப்பாத்தி தோசை பூரி இவைகளுக்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுட சுட சாப்பாட்டில் பிசைந்தும் சாப்பிடலாம்.

vendikai1

Step 1:
முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும். காம்புப் பகுதியும் வால் பகுதியையும் நறுக்கி விட்டு, அந்த வெண்டைக்காயை இரண்டு பாகங்களாக வெட்டி கொண்டால் மட்டும் போதும் பொடியாக நறுக்க வேண்டாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு நான்கிலிருந்து ஐந்து டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, வெண்டைக்காயை இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி எடுக்கவேண்டும். இந்த குறிப்பில் 1/4 கிலோ அளவு வெண்டைக்காய்க்கு தேவையான அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வதக்கிய இந்த வெண்டைக் காய்களை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
வெண்டைக்காய்களை வதக்கி எடுத்த அதே கடாயில், மீதம் கொஞ்சம் நல்லெண்ணெய் இருக்கும், அதோடு மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெயானது, காய்ந்ததும் சீரகம் 1 ஸ்பூன் அளவு போட்டு, தாளிக்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, அதன் பின்பாக பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.

onion

வெங்காயத்தோடு 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போகும் அளவிற்கு வதங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் 1 சேர்த்து, தொக்கு பதம் வரும் அளவிற்கு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

கடாயில் இருக்கும் விழுது, தொக்கு பதத்திற்கு வந்ததும், 2 டேபிள்ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் விட்டு, அதன்பின் கிரேவிக்கு தேவையான அளவு மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இவைகளை சேர்த்து பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்க வேண்டும். இறுதியாக தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Curd (Thayir)

Step 3:
அதன் பின்பு 4 டேபிள் ஸ்பூன் அளவு கெட்டித் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தயிரில் கட்டிகள் இல்லாத அளவிற்கு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து விட்டு, கடாயில் இருக்கும் கிரேவியில் ஊற்றி விடுங்கள். தயிர் 2 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வேண்டும். தயிரை ஊற்றி கடாயில் மூடி போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டால் போதும்.

- Advertisement -

தயிர் கொதித்த பின்பு, மூடியை திறந்தவுடன் நல்ல வாசம் கிடைக்கும். இந்த சமயத்தில் வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காயை கிரேவியில் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய், கிரேவியுடன் சேர்த்து 2 நிமிடங்கள் வரை, வெந்தால் மட்டுமே போதும். வெண்டைக்காய் சீக்கிரம் வெந்து விடும் அல்லவா.

vendikai2

இறுதியாக கிரேவியில் கொத்தமல்லி தழையை தூவி, உங்களுடைய வீட்டில் வெண்ணை இருந்தால் அதிலிருந்து 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெயை கிரேவியில் சேர்த்து இறக்கினால்,கமகம வாசத்தோடு வெண்டைக்காய் கிரேவி, ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரிச்சாக தயாராகியிருக்கும். உங்களுக்கு எவ்வளவு கிரேவி தேவையோ, அந்த அளவிற்கு வெங்காயத்தையும், தக்காளியையும் இரட்டிப்பாக்கி கொள்ளுங்கள். இரண்டு வெங்காயம் சேர்த்தால், ஒரு தக்காளி என்ற அளவு சரியாக இருக்கும் உங்களுக்கு இந்த குறிப்பை படித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
பச்சை கற்பூரத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? பணம் பல மடங்கு பெருக, நீங்களும் முயற்சி செய்து தான் பாருங்களேன்! உங்கள் கையிலும் பணம் கட்டுக் கட்டாக சேர புது வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -