பாரம்பரிய சுவையில் வெந்தயக் குழம்பு! வெந்தயக் குழம்பு என்றாலே அதை இப்படிதாங்க வைக்கணும். மிஸ் பண்ணாம தெரிஞ்சி வச்சுக்கோங்க.

vendhaya-kuzhambu

நிறைய பேருக்கு வெந்தய குழம்பு சாப்பிட பிடிக்கும். ஆனால் சமைக்க தெரியாது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டிகள் இந்த வெந்தயக்குழம்பை சுலபமாக சுவையாக வைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த ஆரோக்கியம் மிகுந்த ஒரு பாரம்பரிய வெந்தய குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்ன சின்ன டிப்ஸை மிஸ் பண்ணாமல் ஃபாலோ பண்ணி, வெந்தய குழம்பு வைத்தாலே போதும். சூப்பரா வரும் ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன் அளவு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். கருகி விடக்கூடாது. வெந்தயம் ரொம்பவும் சிவந்து விட்டால் குழம்பில் கசப்பு தன்மை வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வெந்தயமும் சீரகமும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நாம் மொத்தமாக பயன்படுத்த போவது கிடையாது. ஒரு பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு பழைய புளியை எடுத்து, தண்ணீரில் போட்டு ஊற வைத்து, புளி கரைசலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளிக்கரைசலை ரொம்பவும் கெட்டியாக எடுத்து வைக்கக் கூடாது. கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் புளி, குழம்பில் நன்றாக கொதித்து பச்சை வாடை நீங்கும்.

puli-karaisal

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி, அது மிதமாக காய்ந்ததும் வெங்காய வடகம் இருந்தால் தாளித்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து இவைகளை முதலில் தாளித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு பூண்டுப்பல் தோலுரித்து கொஞ்சம் பொடியாக வெட்டியது – 6 பல், சிறிய வெங்காயம்  – 15 பல், இவைகளை சேர்த்து வெங்காயம் பாதி அளவு வதங்கும் வரை வதக்க வேண்டும். அடுத்தபடியாக தக்காளி பழம் பெரியது – 1 பொடியாக நறுக்கியதை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும்.

kuzhambu

தக்காளியின் பச்சை வாடை நீங்கியதும் குழம்புக்கு தேவையான குழம்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் அளவு இந்த இடத்தில் சேர்க்க வேண்டும். குழம்பு மிளகாய் தூள் வீட்டில் இல்லாதவர்கள், மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன், மல்லித் தூள் – 1 1/4 கால் ஸ்பூன் அளவு குழம்பில் சேர்த்துக் கொண்டால் போதும். இந்த மசாலா தூளை கடாயில் சேர்த்ததும், ஒரு நிமிடங்கள் வரை வதக்கி, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை உடனே ஊற்றி விடுங்கள்.

vendhaya-kuzhambu1

காரத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் மிளகாய்த்தூள் எண்ணெயில் கருகி விடக்கூடாது, என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போது கடாயில் வெங்காயம் தக்காளி குழம்பு மிளகாய் தூள் தண்ணீரோடு சேர்ந்து நன்றாக வெந்து கொதித்து எண்ணெய் பிரிந்து வெளியே வரும். இதற்கு 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை எடுக்கும். இதற்கு அடுத்தபடியாக தான் தயாராக இருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி விட வேண்டும்.

chinna-vengayam

புளிக்கரைசலை ஊற்றி குழம்பை நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு புளியின் பச்சை வாடை போகும் வரை 10 லிருந்து 12 நிமிடங்கள் குழம்பை நன்றாக கொதிக்கவிடுங்கள். உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை இந்த இடத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். குழம்பு சுண்டி தளதளவென வந்துவிடும். குழம்பின் மேலே நல்லெண்ணெய் அப்படியே மிதக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் முதலில் அரைத்து வைத்த வெந்தய பொடியிலிருந்துலிருந்து 2 ஸ்பூன் அளவு எடுத்து, குழம்பின் மேலே தூவி ஒரு கிளறு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.

vendhaya-kuzhambu2

மேலே கொத்தமல்லி தழையை தூவி விடுங்கள். அவ்வளவு தான் குழம்பு நன்றாக ஆறிய பின்பு, அடடா அட்டகாசமான சுவை இருக்கும். இட்லி தோசை, சுட சுட சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.